சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – ரஃபிஸி

அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவிதி சுமார் ஆறு மில்லியன் இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்காளர்களின் கைகளில் தங்கியுள்ளது என்று, முன்னாள் பாண்டன் எம்.பி. தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வாரைக் குறிப்பிட்டு, இசாவும் நானும் இந்த சனிக்கிழமை டவுன்ஹாலில் இளம் வாக்காளர்களைச் சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் கடைசி வாய்ப்பாக இருக்கலாம்” என்று கூறினார்.

அம்னோவின் தலைமையகத்தில் இன்று ஒரு பெரிய கூட்டம் நடத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு ரஃபிசியின் பதிவு வெளியாகியுள்ளது.

15வது பொதுத் தேர்தலுக்கான தேதியை அம்னோ ஏற்கனவே ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்ற வதந்திகளுக்கு மத்தியில் ரஃபிசியின் பதிவும் வெளியாகியுள்ளது.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக யாங் டி-பெர்டுவான் அகோங்குடனான சந்திப்பை உறுதிப்படுத்தினார்.

வெள்ளிக்கிழமை, அம்னோ தலைவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தினர், நாடாளுமந்தாரத்தை கலைப்பதற்கான தேதியை மன்னருக்கு முன்மொழிவதற்கு இஸ்மாயிலுக்கு விருப்புரிமை வழங்கப்பட்டது.

மழை வெள்ளம் மற்றும் மீண்டு வரும் பொருளாதாரத்தை மேற்கோள் காட்டி, GE15 மிகவும் பிந்தைய தேதியில் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி முன்பு அழைப்பு விடுத்து வருகிறது.

-FMT