கைரி: புதிய அமைப்பில் மருத்துவ துறை சார்ந்த 6 அதிகார வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன

சனிக்கிழமை (அக்டோபர் 1) செயல்படுத்தப்பட்ட MyHELP@KKM அமைப்பின் மூலம் சுகாதார அமைச்சக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 6 அதிகார வன்முறை அல்லது கொடுமைப்படுத்துதல் புகார்கள் இன்றுவரை பெறப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

இந்த அமைப்பின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு வழக்கும் (கொடுமைப்படுத்துதல்) அமைச்சின் ஒருமைப்பாட்டுப் பிரிவினால் வெளிப்படையான விசாரணை செயல்முறைக்கு உட்படுத்தப்படும் என்று அமைச்சின் மாதாந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

MyHELP@KKM என்பது அமைச்சின் ஊழியர்களுக்கான பணியிடத்தில் கொடுமைப்படுத்துதல் தொடர்பான புகார்-அறிக்கை அமைப்பாகும்.

“இது நடைமுறைக்கு வந்து நான்கு நாட்களே ஆகியிருந்தாலும், இந்த அமைப்பு ஏற்கனவே ஆறு புகார்களைப் பெற்றுள்ளது. இந்த அமைப்பைப் பயன்படுத்தப் போதுமான தைரியமானவர்கள் இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. அனைத்து புகார்தாரர்களின் அடையாளங்களும் ரகசியமாக வைக்கப்படும் மற்றும் ஆழமான விசாரணை நடத்தப்படும் என்பதால் பயப்படத் தேவையில்லை, “என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 17 அன்று, சுகாதாரப் பணி கலாச்சார மேம்பாட்டு பணிக்குழு (HWCITF) அமைச்சகத்தில் கொடுமைப்படுத்துதல், நிந்தனைக்கு ஆளாகுதல் வழி  உடல் சோர்வு பிரச்சினைகள் மற்றும் ஆரோக்கியமற்ற பணியிட கலாச்சாரம் இருப்பதை உறுதிப்படுத்தியது.

செப்டம்பர் 22 அன்று HWCITF, MyHELP@KKM புகார்கள் அமைப்பைப் பயன்படுத்தப் பரிந்துரைத்ததாகக் கைரி கூறினார், இது அக்டோபர் 1 முதல் அணுகப்படலாம், இது அமைச்சகத்தில் அதிகார வன்முறை மற்றும்  கொடுமைப்படுத்தும் வழக்குகளைக் கையாளுகிறது.

புகார் அமைப்பு, அதிகாரிகள் கொடுமைப்படுத்துதல் வழக்குகள்குறித்து நேரடியாகப் புகார் அளிப்பதை எளிதாக்கும் என்றும், புகார்தாரரின் ரகசியத்தன்மை பராமரிக்கப்பட்டு, வெளிப்படையான நடைமுறைமூலம் உடனடியாகத் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.