15 -வது பொதுத்தேர்தலுக்கு பிறகு நான் பிரதமராக இருந்தால், சுகாதாரத்துறை அமைச்சகராக கைரி நீடிப்பார் – இஸ்மாயில்

15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீண்டும் பிரதமரானால், கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சராகத் தக்கவைக்கப்படுவார்.

ரெம்பாவ் எம்.பி.யை மீண்டும் நியமிப்பேன், ஏனெனில் அவர்  அமைச்சின் தலைமையில் இல்லை என்றால் அது “நஷ்டம்” என்று இஸ்மாயில் செய்தியாள்களிடம் தெரிவித்தார்.

கைரி சுகாதார அமைச்சராக இருந்ததால், நெகிரி செம்பிலானில் உள்ள மலேசியாவின் 600 மில்லியன் ரிங்கிட் தொற்று நோய் நிறுவனத்திற்கு புத்ராஜெயா ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“கைரி போன்ற இந்த அமைச்சரை இழப்பது ஒரு நஷ்டம், ஏனென்றால் இன்னொருவருக்கு இலாகா கிடைத்தால், திட்டம் ரத்து செய்யப்படலாம்,” என்று அவர் மேற்கோள் காட்டினார்.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2023 பட்ஜெட்டின் கீழ் பல்வேறு முயற்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஒதுக்கீடுகள் பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் இஸ்மாயில் கூறினார்.

அதனால்தான் பாரிசான் நேஷனல் முன்மொழியப்பட்ட முன்முயற்சிகள் செயல்படுத்தப்படுவதையும், உதவிகள் விநியோகிக்கப்படுவதையும் உறுதிசெய்ய GE15ஐ வெல்ல வேண்டியுள்ளது.

“பிஎன் GE15ஐ வெல்வதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். பணம் ஏற்கனவே உள்ளது அதை 2023 பட்ஜெட் முயற்சிகளுக்காக பயன்படுத்த தயாராக உள்ளோம்”.

பக்காத்தான் ஹராப்பான் அதன் 22 மாத கால ஆட்சியின் போது அதன் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதைக் குறிப்பிட்டு, எதிர்க்கட்சிகளின் தேர்தல் உறுதிமொழிகளால் மக்கள்  எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு எத்ச்சரிக்கை விடுத்துள்ளார் இஸ்மாயில்.

இதில் பெட்ரோல் விலை குறைப்பு மற்றும் சுங்கச்சாவடிகள் ரத்து செய்யப்பட்டது.

“​​ஒரு அறிக்கை குர்ஆனைப் போன்றது அல்ல, அதை மாற்ற முடியாது என்றார்கள், ஆனால் அவர்களை அந்த அறிக்கையில்உள்ளவற்றை செய்ய முடியவில்லை.

“எனவே, PH நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளை மறந்துவிடாதீர்கள் என்பதை உங்கள் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்”, என்று அவர் கூறினார்.

-FMT