கோழி மற்றும் முட்டைக்கான மானியம் டிசம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு இம்மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை கோழிகளுக்கு ஒரு கிலோவுக்கு 80 காசுகள் மற்றும் ஒரு முட்டைக்கு 8 காசுகள் என்ற விகிதத்தில் தொடர்ந்து மானியம் வழங்க அரசு ஒப்புக்கொண்டது.

ஒரு நாள் வயதுடைய குஞ்சுகள், தளவாடங்கள், தொழிலாளர்கள், பயன்பாடுகள் மற்றும் மருந்துகளின் செலவுகளைத் தவிர, உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குறிப்பாகக் கோழி தீவனம், செயல்பாட்டு செலவுகளில் 70% தொடர்ந்து, கோழி வளர்ப்பவர்களின் சுமையைக் குறைக்க வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர் கூறினார்.

“தீபகற்ப மலேசியாவில், சில்லரை மட்டத்தில் நிலையான கோழியின் உச்சவரம்பு விலை ரிம9.40 கிலோ மற்றும் A, B மற்றும் C கோழி முட்டைகளின் சில்லறை உச்சவரம்பு விலைகளை முறையே ரிம0.45, ரிம0.43 மற்றும் ரிம0.41 ஆகியவற்றில் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தனியார் இனவிருத்தியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்  மற்றும் ஒப்பந்த வளர்ப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தற்போதைய வழிமுறையின்படி, மானிய கொடுப்பனவுகள் நேரடியாக விவசாய வங்கிமூலம் விவசாயிகளின் கணக்குகளில் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பண்ணை மட்டத்தில் உற்பத்தியின் தொடர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கப் பணம் செலுத்தும் செயல்முறை சீராகச் செயல்படுத்தப்படுவதை அமைச்சகம் உறுதி செய்யும், கியாண்டி(Kiandee) மேலும் கூறினார்.

மானியத் திட்ட விரிவாக்கத்திற்கு அரசாங்கத்திற்கு ரிம573.96 மில்லியன் கூடுதல் நிதிச் செலவு அடங்கும் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கோழி மற்றும் முட்டை மானியங்களுக்கான ஒதுக்கீடு ரிம1.233 பில்லியன்.

“அக்டோபர் 4 வரை, RM1.136 பில்லியன் மதிப்புள்ள மொத்தம் 13,440 மானிய கோரிக்கை விண்ணப்பங்கள் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மேலும் அனைத்து வளர்ப்பாளர்களும் மானியங்களுக்கான விண்ணப்பங்களைத் தொடர்ந்து சமர்ப்பிக்கலாம்,” என்று கியாண்டி கூறினார்.

மலேசிய குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில் கோழி மற்றும் முட்டைகளை நியாயமான விலையில் சரியான நேரத்தில் மற்றும் போதுமான அளவில் வழங்குவதை உறுதி செய்வதைத் தவிர, தொடர்ந்து மானியங்களை வழங்குவதன் மூலம் கோழிப்பண்ணை தொழில் நிலையானதாக இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.