எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தனது லங்காவி தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார்.
“லங்காவியில், (Pejuang) வேட்பாளர் மகாதீர் முகமது,” என்று அவர் இன்று அறிவித்தார்.
சுமார் நான்கு ஆண்டுகளாகப் பெர்சத்துவை வழிநடத்திய மகாதீர், இப்போது மலாய் தேசியத்தை தளமாகக் கொண்ட பெஜுவாங் மற்றும் கெரகான் தனா ஏர் (Gerakan Tanah Air) கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறார்.
புத்ராஜெயாவில் உள்ள Perdana Leadership Foundation இல் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், GTA இன் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் இன்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்று மகாதீர் குறிப்பிட்டார்.
“GTA, GTA வாகப் போட்டியிட முடியாது. இதன் காரணமாக, கட்சியின் சின்னம் மற்றும் பேனரின் கீழ் நாங்கள் பெஜுவாங்காகப் போட்டியிடுவோம் என்று நாங்கள் இன்று முடிவு செய்தோம், “என்று அவர் கூறினார், GTA வேட்பாளர்களாக நிற்க ஒப்புக்கொண்டவர்கள் பெஜுவாங் சின்னத்தையும் பயன்படுத்துவார்கள்.
இது கிளந்தானைத் தவிர – அங்கு மாநிலத்தில் வேட்பாளர்களை நிறுத்தும் ஒரே GTA கட்சியாகப் பார்டி புத்ரா இருக்கும். பிற மாநிலங்களில் உள்ள புத்ரா வேட்பாளர்கள் பெஜுவாங்கின் பேனரைப் பயன்படுத்துவார்கள்.