பள்ளிச் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க சனிக்கிழமையன்று வாக்கெடுப்பு நடத்துங்கள் – கல்வி அமைச்சர்

15 -வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பள்ளிச் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, தேர்தல் ஆணையம் சனிக்கிழமையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு சனிக்கிழமை வாக்குப்பதிவு நாளைக் தேர்தெடுப்பது, ஆயத்த வேலைகளை எளிதாக்கும், குறிப்பாக தேர்தல் ஆணையத்திற்கு என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி இருக்கும் மாநிலங்கள் இருப்பதால், சனிக்கிழமையில் செய்தால் இது எளிதானது,” என்று அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நாள் புதன்கிழமை அன்று நடந்தது.

கடந்த திங்களன்று, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டதாக அறிவித்தார், இது 60 நாட்களுக்குள் 15 -வது பொதுத்தேர்தலை நடத்துவதற்கு வழி வகுத்தது.

-FMT