அன்வார்: இனி ஏமார மாட்டோம், ஹராப்பானுக்கு புதிய ‘தலைவர்’ இருக்கிறார்

தற்போது கூட்டணிக்கு ஒரு புதிய “தலைவர்” இருப்பதால், பக்காத்தான் ஹராப்பான் செயலாக்கம் பற்றி மக்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை, என்றார் அன்வார் இப்ராகிம்.

ஹராப்பான் தலைவரின் கூற்றுப்படி, கூட்டணியில் இனி “பழையன” இல்லை, மேலும் முந்தைய வாக்குறுதிகள் முடிந்தவரை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

“ஹரப்பான் 22 மாதங்கள் மலேசியாவை ஆட்சி செய்தது, தேசிய முன்னணியின் 60 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில்… 22 மாதங்கள் ஆட்சியை தற்காக்கவில்லை, ஆனால் நல்லது நடந்தால் நல்லதுதான் அதே வேளையில்  கெட்டதாக இருந்தால் அதையும் சமாளிக்கத்தான் வேண்டும் என்றார்.

“ஆனால் ஹராப்பான் தலைவர் இப்போது ‘பழையவர்’ அல்ல. இதையெல்லாம் (15வது பொதுத் தேர்தல் அறிக்கை) சொல்லும் தலைவர் ர் நான்தான், அன்வார்,” என்று தற்போதைய போர்ட்டிக்சன் எம்.பி., பேராக்கின் தாபாவில் நேற்று இரவு நடந்த ஜெலாஜா நதி ரக்யாத் நிகழ்ச்சியில் கூறினார்.

ஷெரட்டன் இயக்கத்தில் ஏற்பட்ட விலகல்களால், கூட்டணி ஆட்சி 22 மாதங்கள் மட்டுமே நீடித்தது – ஹராப்பானின் அரசியல் எதிரிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவரது கருத்து இருந்தது.

டாக்டர் மகாதீர் முகமது 2018 முதல் 2020 இல் புத்ராஜெயாவிலிருந்து கூட்டணி வெளியேற்றப்படும் வரை பிரதமராகவும், ஹராப்பான் தலைவராகவும் இருந்தார்.

ஹராப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் பட்டியலிடப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று முன்னர் விமர்சிக்கப்பட்டது.

மகாதீர் ஒருமுறை ஹராப்பான் அறிக்கையை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அந்த அறிக்கை ஒரு வழிகாட்டி என்றும் புனித புத்தகம் அல்ல என்றும் கூறினார்.

அந்தக் குறிப்பில், “22 மாத நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்” கதையைத் தவிர, தனது கூட்டணியைத் தாக்குவதற்கு ஆயுதங்கள் இல்லாத   ஹராப்பானின் எதிரிகளை அன்வார் சாடினார்.

தாப்பாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பிகேஆர் துணைத் தலைவர்கள் சான் லிஹ் காங் மற்றும் கே சரஸ்வதி, தற்போதைய சுங்கை சிபுட் எம்பி எஸ் கேசவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தாப்பா ஒரு பிஎன் கோட்டையாகும், மேலும் மஇகா துணைத் தலைவராக இருக்கும் அதன் தற்போதைய எம்பி எம்.சரவணன் மீண்டும் இந்த தேர்தலிலும் நிறுத்தப்படலாம்.