நெசாட் சூறாவளி குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையம் பலத்த காற்று, கடல் சீற்றம் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது

மலேசிய வானிலை ஆய்வு மையம் நேசாட்(Nesat) சூறாவளிகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது, இது சபாவின் குடாட்டில்(Kudat) இருந்து வடமேற்கே சுமார் 1,328 கிமீ தொலைவில் உள்ளது.

சீனாவின் ஹைனான்(Hainan) நகருக்கு கிழக்கே சுமார் 380 கிமீ தொலைவில் இந்தச் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காலை 8 மணிக்குக் கவனித்ததன் அடிப்படையில், சூறாவளி மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கில் நகர்ந்து வருவதாகவும், அதிகபட்சமாக மணிக்கு 139 கி.மீ வேகத்தை அடையக்கூடும் என்றும்  தெரிவித்துள்ளது.

இந்த நிலை தென் சீனக் கடலுக்கு அப்பால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அது மேலும் கூறியது.