கிள்ளான் மக்களுக்காக சிறப்பாக சேவைபுரியும் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் கிள்ளானுக்கே வேட்பாளராக தேர்ந்துடுக்கப் படவேண்டும் என்று கிள்ளான் இந்திய அரசு சார இயக்கங்கள் சூளுரைத்தன.
கிள்ளான் தொகுதியில் கடந்த 3 தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினராக சார்லஸ் சந்தியாகோ தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வட்டார மக்களுக்கு அவரின் ஒப்பற்ற சேவையை ஆற்றியுள்ளார். இவரின் சேவையானது தனது தொகுதியளவில் மட்டும் நில்லாமல் தேசிய அளவிலும் பல முக்கியப் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்திலும் தேசிய ஊடகங்களிலும் குறல் எழுப்பு ஊள்ளார்.
கோவிட் பெறுந்தொற்று காலக்கட்டத்தில் மக்களுக்கு உதவுவதோடு மட்டுமின்றி கிள்ளானில்லுள்ள வியாபாரிகளும் குறுகிய காலத்தில் மீண்டு வியாபாரத்தை தொடர உதவியுள்ளார் என கிள்ளான் வர்த்தக இயக்கங்கள் தெரிவித்தன. அதுமட்டுமன்றி, சிலாங்கூர் வாழ் எழிய மற்றும் நடுத்தர இந்திய மக்களின் பொருளாதாரம் உயர பல திட்டங்களை மாநில அளவிலும் கிள்ளான் வட்டார அளவிலும் வெற்றிகரமாக செய்துள்ளார்.
வெள்ளப் பேரிடரின்போது கிள்ளானில்லுள்ள குடியிருப்பு இயக்கங்களுடன் இணைந்து அரும்பாடுப்பட்டு கிள்ளான் வட்டார மக்களுக்கு தகுந்த வேளையில் சிறந்த பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து, வாநியல் மாற்றங்களை ஒட்டி குறல் எழுப்புவதோடு வருங்காலங்களில் வெள்ளப் பேரிடரை கிள்ளான் வட்டாரத்தில் தவிர்க்க நீண்டக் காலத் திட்டத்தையும் வகுத்துள்ளார்.
இது போன்று பல நன்மிகு சேவையை மக்களுக்கென கடந்த 14 ஆண்டுகளாக சீறிய முறையில் ஆற்றிவந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ அவர்களுக்கு வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாது என்று முக்கிய வட்டாரங்களிலிருந்து வந்த சேய்திகள் கிள்ளான் மக்களிடையிலும் இந்திய அரசு சார இயக்கங்களிடையிலும் பேர் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிக இந்தியர்கள் வாழும் கிள்ளான் வட்டார இந்திய அரசு சார இயக்கங்களின் கருத்தை ஐ.செ.க கண்டிப்பட செவிமெடுத்தல் அவசியம். மக்களின் ஆதரவையும் தேர்வையும் பொருட்படுத்தாது தன்னிச்சையாக ஐ.செ.க முடிவெடுக்குமேயானால் இந்திய வாக்காளர்களின் ஆதரவை கிள்ளான் தொகுதியில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் இழக்கும் அபாயத்தை பக்கத்தான் ஹரப்பான் சந்திக்க நேரிடும் என கிள்ளான் இந்திய அரசு சார இயக்கங்கள் தெரிவித்தன.
எந்த ஒரு சர்ச்சையிலும் கடந்த 14 ஆண்டுகளில் சிக்காமல் சிறப்பான முறையில் மக்களுக்கு சேவையாற்றியுள்ள சார்லஸ் சந்தியாகோ தொடர்ந்து சேவையாற்ற வேண்டு. அவரின் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. ஆகையால், வருகின்ற 15ஆவது பொதுதேர்தலில் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளாராக நியமிக்கப்படவேண்டும் என்பதே கிள்ளான் மக்கள் மற்றும் இந்திய சமூக தலைவர்களின் அவா.