நான் உங்களுக்கு முதுமையாகத் தெரிகிறேனா – டாக்டர் மகாதீர் முகமட்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இன்று, வயது முதிர்வு காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்த போதிலும், தனது லாங்காவி நாடாளுமன்றத் தொகுதியைப் பாதுகாக்க இன்னும் தகுதியானவர் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

அவருக்கு வயது 97.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மகாதீர் மற்றவர்களைப் போல முதுமை அடைந்தவர் அல்ல என்று கூறினார்.

“நான் உங்களுக்கு முதுமையாகத் தோன்றுகிறேனா? உங்கள் கேள்விகளுக்கும் மற்றவர்களின் கேள்விகளுக்கும் என்னால் பதிலளிக்க முடியும்”.

“ஆம், 97 வயதுடையவர்கள் பொதுவாக முதுமை அடைந்தவர்கள் என்பது உண்மைதான்”.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் (GE15) போட்டியிடும் மகாதீரின் முடிவு நல்ல வரவேற்பைப் பெறவில்லை, மேலும் சிலர் அவரை அரசியலிலிருந்து ஓய்வு பெறுமாறு வலியுறுத்தினர்.