டிஏபியில் மூன்று முறை வென்ற கிள்ளான் எம்பி சார்ல்ஸ் 15வது பொதுத் தேர்தலுக்கான வரிசையில் இருந்து நீக்கலாம் என்று கட்சி வட்டாரம் ஒன்று கூறியுள்ளது.
“சந்திடியாகோ எந்த இடத்திலும் போட்டியியிடமாட்டார் ” என்று பெயர் வெளியிட மறுத்த ஆதாரம் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் எக்ஸ்கோ வி கணபதிராவ் ரவருக்கு பதிலாக வரக்கூடும் என்றும், “ஆரம்பத்தில் இது செரி கெம்பாங்கன் சட்டமன்ற உறுப்பினர் ஈன் யோங் ஹியன் வாவாக இருக்க வேண்டும், ஆனால் பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு இல்லை என்பதால் ,இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்று செய்தியாளர்களிடம் கூறப்பட்டுள்ளது.
2018 பொதுத் தேர்தலில், பாரிசான் நேஷனல் மற்றும் பாஸ் வேட்பாளர்களுக்கு எதிராக 78,773 வாக்குகள் பெரும்பான்மையுடன் கிள்ளான் தொகுதியை சாந்தியாகோ தக்கவைத்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து கணபதிராவைத் தொடர்பு கொண்டபோது, தன்னை ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடச் சொல்வதாகக் கேள்விப்பட்டதாகவும், ஆனால் தன்னை எங்கு நிற்கச் சொல்வார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
“இது சிலாங்கூரில் கிள்ளான் அல்லது வேறு ஏதாவது தொகுதியாக இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது கிள்ளானாக இருந்தால், நான் போட்டியிடுவேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
கிள்ளான் வட்டார சமூக இயக்கங்கள் சார்ல்ஸ்-க்கு ஆதரவாக அறிக்கை விட்டு வருகின்றனர்.