புயலைத் தொடர்ந்து மலாக்காவின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிப்பு

நேற்று மாலை பெய்த கனமழையால் மலாக்காவில் பல இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வெள்ளம் பல குடியிருப்பு பகுதிகளை பாதித்தது மற்றும் மரங்கள் விழுந்ததால் வாகனங்களும் சேதமடைந்தன. எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை, என்று மாநில சிவில் பாதுகாப்பு படை  இயக்குனர் கமாருல்ஸ்யா முஸ்லிம் தெரிவித்தார்.

“டுரியன் துங்கல், அலோர் கஜாவில் உள்ள நான்கு குடியிருப்புப் பகுதிகள், அருகிலுள்ள ஆறு நிரம்பி வழிந்ததால் வெள்ளத்தில் மூழ்கின, ஆனால் எந்த நிவாரண மையமும் திறக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

“வெள்ளம் பாதித்த பகுதிகள் கம்பங் காடெக், கம்போங் புக்கிட் தம்புன், கம்போங் புங்கூர் மற்றும் கம்போங் புக்கிட் பலாயில் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்கள் நிலைமை கட்டுக்குள் வரும் வரை அருகிலுள்ள சமூகக் கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

மலாக்கா தெங்கா மாவட்டத்தைச் சுற்றி விழுந்த மரங்களால் வாகனங்கள் மோதியதாக மூன்று புகார்கள் கிடைத்துள்ளன, என்று இதற்கிடையில், மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஜேபிபிஎம் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு சென்றதால், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

 

 

-FMT