15வது பொதுத் தேர்தலில் (GE15) பேரா நாடாளுமன்றத் தொகுதிக்கான போட்டியில் யாரையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தற்காலிகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
அபாஸ் அவாங்கை(Abas Awang) வேட்பாளராக நிறுத்திய PKR இன் நேற்றைய அறிவிப்புக்குப் பதிலளித்த இஸ்மாயில் சப்ரி, ஜனநாயக நாட்டில் எந்தவொரு தேர்தலிலும் போட்டி இயல்பானது என்றார்.
இஸ்மாயில் சப்ரி தான் GE15ல் பேரா தொகுதியைப் பாதுகாக்கப் போவதாக முன்னர் உறுதிப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
PKR, நேற்று தேர்தலுக்கான தனது வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கும் நிகழ்வில், அதன் தலைவர் அன்வார் இப்ராகிம் போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து GE15ல் தம்புன் தொகுதியில் போட்டியிடுவார் என்றும், ஹாங் துவா ஜெயா தொகுதியில் தற்போதைய ஷம்சுல் இஸ்கந்தர் முகமது போட்டியிடுவார் என்றும் கூறினார்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராகப் பாகன் டத்தோ தொகுதியில் அகின் போட்டியிடுகிறார்.
PKRரின் இருக்கை இடமாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த இஸ்மாயில் சப்ரி, இது அம்னோவுக்கு முரணானது, அங்குப் பதவியில் உள்ள அனைவரும் தங்கள் இடங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்றார்.
“ஒருவேளை அவர்கள் இதுவரை வாக்காளர்களுக்குத் தங்கள் தொகுதிகளில் வழங்கிய சேவைகளில் நம்பிக்கை இல்லை, இது புதிய இடத்தில் வாக்காளர்களைப் பாதிக்கும் பொருட்டு வேறு இடங்களுக்குச் சென்று புதிய வாக்குறுதிகளை வழங்க வழிவகுத்தது”.
“அவர்கள் அதே வாக்காளர்களுக்குப் பொய் சொல்ல முடியாது, அவர்கள் சேவை செய்யாவிட்டால், மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதால், அவர்களால் மேலும் வாக்குறுதிகளை வழங்க முடியாது,” என்று அவர் கூறினார்.
இஸ்மாயில் சப்ரி 2004 ஆம் ஆண்டு முதல் பேராவில் போட்டியிட்டதாகவும், இன்னும் GE15 இல் போட்டியிடுவதாகவும் கூறினார்.
“அனைத்து அம்னோ வேட்பாளர்களையும் நீங்கள் பார்த்தால், நாங்கள் ஒரே இடத்தில் இருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் சிறந்த சேவையை வழங்கியுள்ளோம், எனவே நாங்கள் எந்தச் சேவையையும் வழங்குவதாக உறுதியளித்தால் அவர்கள் (வாக்காளர்கள்) எங்களை நம்புவார்கள்,” என்று அவர் கூறினார்.