பக்காத்தான் ஹராப்பான் அறிவார்ந்த இந்திய பிரதிநிதிகளை புறக்கணித்தது

  டெரன்ஸ் நெட்டோ – டிஏபி தற்போதைய கிள்ளான் எம்பி சார்லஸ் சாண்டியாகோவை நீக்கிய பிறகு, தற்போதைய சுங்கை பூலோ எம்பி ஆர் சிவசராவை கைவிட பிகேஆர் எடுத்த முடிவு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் அறிவுத்திறன் கொண்ட இந்திய மலேசிய பிரதிநிதிகளுக்கு குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.

சிவராசாவுக்குப் பதிலாக ராமானுஜம் ராமகிருஷ்ணனும், சார்லஸுக்குப் பதிலாக வி.கணபதிராவும் ஹராப்பானால் தேர்வு செய்யப்பட்டார்கள்.

ஹரப்பானில் இந்தியப் பிரதிநிதிகளின் அறிவுப் பொலிவின் GE14 இல் இருந்து குறையத் தொடங்கியது.

​​ஒரு திறமையான மனித உரிமைகள் வழக்கறிஞரும், சில சமயங்களில் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆலோசகருமான என் சுரேந்திரனை கைவிட்டு விட்டு  படாங் செராய்யில் போக்குவரத்துத் தொழிலை நடத்தும் எம் கருப்பையாவை நிறுத்தியது ஹரப்பான்.

கருப்பையா GE15-இல் மீண்டும்  போட்டியிடுகிறார்.

டிஏபியின் சார்லஸுக்குப் பதிலாக கணபதிராவ் – இவரின் செயல்திறன் கேள்விக்குறியதாகும். அதனால்தான் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய மக்கள்தொகையில் B40 குழுக்களிடையே வறுமையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து அவருக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை உருவாக்க அனுமதித்தார்.

சார்ல்ஸ் மற்றும் சிவராசா ஆகியோர் ஆலோசனைக் குழுவில்  உறுப்பினர்களாக உள்ள நிலையில், மாநில செயற்குழு உறுப்பினர் கணபதிராவ் சேர்க்கப்படாததால், அவர் கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

வேலையில் கவனம் செலுத்தினார்

சார்ல்ஸ், எம்பியாக தனது பணியில் கவனம் செலுத்த விரும்பினார். நாடாளுமன்ற உறுப்பினராக அவர் மூன்று முறையும் (2008-2021) சிறப்பாக பணியாற்றினார்.

இத்தாலிய சமூகக் கோட்பாட்டாளரான அன்டோனியோ கிராம்சி,  சொல்லும் “கர்ம ஜீவி” என்ற வகையில் செயல்பட்டார்.

இது ஒருவர் தனக்கெனத் தேர்ந்தெடுத்த வேலையின் சூழலில் தன்னை முழுமையாக ஆழ்த்தி அதன் மூலம் மக்களுக்குள் இருக்கும் இக்கட்டான உணர்வுகள் பற்றிய விழிப்புணர்வை உள்வாங்கி, அதன் தாக்கத்தின் வழி பெறும் அறிவாற்றலை கொண்டு அதிகார வரம்பின் எல்லையை மக்களின் நலம் கருதி அகற்ற போராடுவதாகும்.

அறிவாற்றல் கொண்ட மக்கள், கிராம்சியின் கோட்பாட்டை பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியை இயக்கும் ஒரு அரசியலாக உருவாக்கினர்.

சுரேந்திரனின் ஒரே பதவிக் காலத்தில் (2013-2018) பதங் செராய் எம்.பி.யாகவும், சிவராசா (2008-2018) சுங்கை பூலோவில் எம்.பி.யாக இருந்தபோதும் சார்ல்சின் அனுபவங்கள் அவ்வகையில் இருந்திருக்க வேண்டும்.

இவர்களைப் போன்ற பிரதிநிதிகள் காலப்போக்கில் மட்டுமே முன்னேற முடியும். 2012ல் கட்சியில் இணைந்த கருப்பையாவை, சுரேந்திரனுக்கு பதிலாக ஜிஇ13ல் (மே 2013) பிகேஆர் அனுமதித்தது, ஒரு அரசியல்  நகைச்சுவையாகும்.