15 வது பொதுத் தேர்தலில் சபாவில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்த மூன்று இளம் வேட்பாளர்களை வாரிசான் பெயரிட்டுள்ளது
தவாவில் 28 வயதான வழக்கறிஞர் சென் கெட் சூயின்(Chen Ket Chuin), 31 வயதான வேதியியல் பொறியாளர் அலெக்ஸ் தியென்(Alex Thien), கோத்தா கினாபாலுவில் ஆராய்ச்சி ஆய்வாளர் அமண்டா இயோ (Amanda Yeo) ஆகியோர் போட்டியிடுவர் என்று அதன் தலைவர் முகமது ஷாஃபி அப்டல்(Mohd Shafie Apdal) கூறினார்.
“நல்ல பின்னணியைக் கொண்ட இளம் வேட்பாளர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம்”.
“வாரிசானுக்காக மட்டுமல்ல, நாட்டிற்காகவும் தலைவர்களாக இளைஞர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். இளைஞர்களை வாக்காளர்களாக மட்டுமே அழைக்க முடியாது, அவர்கள் தலைமை தாங்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும், “என்று நேற்றிரவு கோட்டா கினாபாலுவில் உள்ள லிகாஸில் நடந்த ‘Reset Sabah’ இரவு விருந்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மூன்று நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றுவதில் உள்ள சவால்கள்குறித்து கேட்டபோது, அனைவருக்கும், குறிப்பாக வாக்காளர்களுக்கும் முக்கியமானது என்னவென்றால், இந்த இளம் வேட்பாளர்கள் நாட்டிற்கு மாற்றங்களைச் செயல்படுத்துவதற்காக வெற்றியைப் பெற உதவுவது முக்கியம் என்று ஷாஃபி கூறினார்.
சபாவில் உள்ள மலேசியர்கள் சரியான இளம் தலைவர்களுக்கு வாக்களிப்பது முக்கியம் என்றார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், தவாவ் நாடாளுமன்றத் தொகுதியைச் சபா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் கிறிஸ்டினா லீவ்(Christina Liew) பிகேஆரை பிரதிநிதித்துவப்படுத்தினார்; சந்தகனில் விவியன் வோங் Vivian Wong (DAP); மற்றும் கோட்டா கினபாலுவில் சான் ஃபூங் ஹின்(Chan Foong Hin) (DAP) இருந்தனர்.