கிள்ளானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீபாவளி கோலத்தைச் சேதப்படுத்தியதற்காக இரண்டு ஊழியர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிள்ளான் உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் எஸ் விஜய ராவ், இருவரும் நேற்றிரவு மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு வந்ததாகவும், அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இரண்டு சந்தேக நபர்களும் – முறையே 20 மற்றும் 30 வயதுடையவர்கள் – இன்று முதல் மூன்று நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று, வைரலான 39 வினாடிகள் கொண்ட வீடியோவில், சந்தேக நபர்களில் ஒருவர் பாஜு மேலாயுவை அணிந்தபடி அலங்காரத்தின் மீது நடந்து செல்வதையும், அதைச் சேதப்படுத்த தனது காலணிகளின் நுனியைப் பயன்படுத்துவதையும் காட்டியது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298A இன் படி வழக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மதத்தை அவமதிப்பதன் மூலம் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் குற்றத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் கூறுகிறது.
சம்பவம் நடந்த மருத்துவமனைக்குச் சொந்தமான KPJ ஹெல்த்கேர் – அதன் ஊழியர்கள் கோலத்தைச் சேதப்படுத்தியதில் ஈடுபட்டது குறித்து அதன் சொந்த உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தங்கள் ஊழியர்களுக்குத் தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.