குறைந்தபட்சம் 40  நாடாளுமன்ற இடங்களை வெல்வதை பாஸ் இலக்கு வைத்துள்ளது

15வது பொதுத் தேர்தலில் (GE15) கட்சி போட்டியிடும் 60க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் குறைந்தது 40 இடங்களையாவது வெற்றி பெறுவதை பாஸ் இலக்காகக் கொண்டுள்ளது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

“நாங்கள் 40 இடங்களை வெல்வதற்கு கடுமையாக உழைத்து வருகிறோம், முடிந்தால் மேலும் வெற்றி பெற விரும்புகிறோம்,” என்று அவர் நேற்று கூறினார்.

கட்சியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஸ் தனது நாடாளுமன்ற இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பகாங் மற்றும் பெர்லிஸ் ஆகிய இடங்களில் அக்கட்சிக்கு சில இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

PN துணைத் தலைவரான ஹாடி, கூட்டணி GE15க்கான வேட்பாளர்களை உறுதி செய்துள்ளது என்றும் அவர்களின் பெயர்களை PN தலைவர் முகைடின் யாசின் அறிவிப்பார் என்றும் கூறினார்.

GE14 இல், PAS 18 நாடாளுமன்ற இடங்களை வென்றது. GE15ல் மொத்தம் 222 இடங்கள் உள்ளன.