நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பழங்களில் சைக்லேமேட் போன்ற செயற்கை இனிப்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சகம் சிறிய அன்னாசிப்பழங்கள் அல்லது “பேபி அன்னாசிப்பழங்கள்” மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளது.
அமைச்சகத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவின் மூத்த இயக்குநர் நோரானி எக்சன் ஒரு அறிக்கையில், தனது பிரிவு 2017 முதல் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகக் தெரிவித்துள்ளார்.
“2021 ஆம் ஆண்டு தொடங்கி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பேபி அன்னாசிப்பழங்கள் உரிக்கப்பட்ட தோல் மீது ‘பிடி, சோதனை மற்றும் தேர்ச்சி’ பரிசோதனைகளையும் விதித்துள்ளோம்.
“இதுவரை, பல்வேறு அளவுருக்களை பகுப்பாய்வு செய்வதற்காக மொத்தம் 115 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
“அந்த எண்ணிக்கையில், 11 மாதிரிகளில் சைக்லேமேட் இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மொத்தம் 8,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.”
சுக்ரோஸை விட 30 முதல் 50 மடங்கு இனிப்பான சைக்லேமேட் என்ற இனிப்பு வகையைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சிறிய அன்னாசிப்பழங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
உணவு சேர்க்கைகளுக்கான கோடெக்ஸ் ஜெனரல் ஸ்டாண்டர்ட் (GSFA) படி, ஜாம், ஜெல்லி மற்றும் மர்மலேட், கோகோ பொருட்கள் மற்றும் சாக்லேட் பொருட்கள், கோகோ ஸ்ப்ரெட் மற்றும் கலவை சாக்லேட், அத்துடன் சுவையூட்டப்பட்ட சாக்லேட்,மென் பானங்கள் போன்ற சில உணவுகளில் சைக்லேமேட் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது என்று நோரானி கூறினார்.
“இருப்பினும், உரிக்கப்பட்டது அல்லது சாப்பிட தயாராக உள்ள புதிய பழங்களில் சைக்லேமேட் சேர்க்க அனுமதிக்கப்படவில்லை.
“1985 உணவு விதிமுறைகளின் படி புதிய பழங்களில் சைக்லேமேட்டை சேர்க்க அனுமதிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
விதியை மீறும் எவருக்கும் 20,000 ரின்ங்கிட்டுக்கு மிகாமல் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
-FMT