வெல்க்ரோ காலணி அணிந்தற்காக மாணவரைத் தண்டித்த ஆசிரியர்

பினாங்கில் உள்ள தசெக் கெலுகூரில்(Tasek Gelugor) நவம்பர் 1ம் தேதி நடந்த பள்ளி கூட்டத்தின்போது தவறான வகை காலணிகளை அணிந்ததற்காகப் பள்ளியில் மண்டியிடச் சொன்னதாகக் கூறப்படும்  தனக்கு வழங்கப்பட்ட தண்டனைகுறித்து ஒரு மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

வெல்க்ரோ பட்டைகள் கொண்ட காலணிகளை அணிந்திருந்ததைக் கண்டு தார் சாலையில் மண்டியிட்டு இரு கைகளையும் உயர்த்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியதாக 13 வயது மாணவி குற்றம் சாட்டினார்.

கூட்டத்திற்குப் பிறகு, ஆசிரியர் தனது வலது மணிக்கட்டில் அணிந்திருந்த ஒரு புனித கயிற்றை வெட்டியதாக அவர் கூறினார், மேலும் அவரது நெற்றியில் இருந்த கறுப்பு பொட்டையும், புனித சாம்பலையும் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது.

“வெல்க்ரோ காலணி அணிந்ததற்காக ஒரு ஆசிரியரால் நான் கண்டிக்கப்பட்டேன்”.

மலேசியாகினி பார்வையிட்ட போலீஸ் அறிக்கையில், “எனக்கு லேசிங் ஷூக்களை வாங்கித் தர என் தந்தையால் முடியாது என்று ஆசிரியரிடம் கூறினேன்”.என்ற புகாரும் இருந்தது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும்,பள்ளிக்குச் செல்லப் பயப்படுவதாகவும், செவ்வாய்கிழமை தாசெக் கெலுகோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் மாணவி கூறினார்.

தசெக் கெலுகோர் காவல்துறைத் தலைவர் ராட்ஸி அஹ்மட், புகார் அறிக்கை பெற்றதை உறுதிப்படுத்தினார்.