சுங்கை பூலோ தொகுதியை 15வது பொதுத் தேர்தலில் மீண்டும் தற்காக்க ஆர் சிவராசாவை தானும் கட்சியின் வேட்பாளர் தேர்வுக் குழுவும் ஆரம்பத்தில் முன்மொழிந்ததாகக் கூறினார் ரபிசி ரம்லி.
இருப்பினும், பிகேஆர் தலைவர் அன்வார் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்.
“வேட்பாளர் தேர்வுக் குழுவுக்கும், எனக்கும், தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததை என்னால் கூற முடியும்.”
“சிவராசாவை (சுங்கை பூலோவில்) நிறுத்த வேண்டும் என்று நானும் குழுவும் பரிந்துரைத்தோம், ஆனால் கட்சித் தலைவர் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார், அவருடைய கருத்தையும் அவரது விருப்பத்தையும் நான் மதிக்கிறேன், ஏனெனில் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரின் கைகளில் உள்ளது.” என்று ராபிஸி இன்று கோலாலம்பூரில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பிகேஆர் அதன் துணைத் தகவல் தலைவர் ஆர் ரமணனை சுங்கை பூலோவில் நிறுத்தப் போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா ஆகும்