அதிகரித்து வரும் கோவிட் -19 பாதிப்புகளுக்கு மத்தியில் வாக்காளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

அதிகரித்து வரும் கோவிட்-19 நேர்வுகளுக்கு மத்தியில், பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகள் முகமூடி அணிவதை ஊக்குவிக்குமாறு தொற்று நோய் நிபுணர் டாக்டர் கிறிஸ்டோபர் லீ வலியுறுத்தியுள்ளார்.

நாளைத் தொடங்கும் இரண்டு வாரப் பிரச்சார காலத்தில் கோவிட்-19 நேர்வுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சுகாதார அமைச்சின் ஆதாரம் காட்டுகிறது.

“இந்தப் போக்கு நிச்சயமாக (Omicron) XBB (துணை மாறுபாடு) உடன் எதிர்பார்க்கப்படுகிறது, தடுப்பூசி நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது மற்றும் GE15 காரணமாக மக்கள் இயக்கம் அதிகரித்துள்ளது”.

“அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் சொற்பொழிவு அல்லது பிற தேர்தல் நடவடிக்கைகளின்போது முகமூடியை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்”.

“வாக்காளர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவர்களின் முன்னுரிமையாகவும் இருக்க வேண்டும்,” என்று முன்னாள் சுகாதார துணை இயக்குநர் ஜெனரல் ட்வீட் செய்துள்ளார்.

மருத்துவர் டாக்டர் கிறிஸ்டோபர் லீ

திங்களன்று, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், Omicron XBB காரணமாக நாடு ஒரு சிறிய கோவிட்-19 அலையை அனுபவித்து வருவதாகக் கூறினார்.

கடந்த வாரத்தில் கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.3% அதிகரித்துள்ளது என்றார்.

கடந்த வாரம் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் நான்கு நேர்வுகள் மூலம் கண்டறியப்பட்ட துணை மாறுபாடு, சிங்கப்பூரில் நேர்வுகள் அதிகரிப்பதற்கும் காரணம் என்று கைரி மேலும் கூறினார்.

2020 இல் சபா தேர்தலைத் தொடர்ந்து அரசியல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் மலேசியா முன்பு கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்தது.

முந்தைய மாநில மற்றும் இடைத்தேர்தல்களைப் போலல்லாமல், முகமூடிகள் கட்டாயமில்லை, ஆனால்  ஊக்குவிக்கப்படுகின்றன.