BN வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யக் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வையுங்கள் – இஸ்மாயில் சப்ரி

BN தலைவர்களும் உறுப்பினர்களும், குறிப்பாக அம்னோவில், 15வது பொதுத் தேர்தலில் (GE15) கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தற்காலிகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

ஒவ்வொரு பிரச்சினையும் முடிவும் கட்சியின் நலன் கருதி எடுக்கப்பட்டது, எனவே தேர்தலில் BN வெற்றியை உறுதி செய்ய ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் ஆதரவைத்  தருவது மட்டுமே சரியானது என்றார்.

“பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி, மாநிலத் தேர்தலாக இருந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். அது சாதாரணமானது. முன்மொழியப்பட்ட ஒவ்வொரு பெயரும் போட்டியிடுவதற்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படாது”.

“எல்லோரும் தகுதி பெற்றிருந்தாலும், ஒரு வேட்பாளர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். முக்கியமானது என்னவென்றால், அவர் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், கட்சிக்கு வெற்றியை உறுதிசெய்ய அவருக்கு ஆதரவளிப்பதே எங்கள் வேலை,” என்று அம்னோ துணைத் தலைவரான இஸ்மாயில் சப்ரி, BN இயந்திரத் தயாரிப்புகளைச் சரிபார்த்த பிறகு கூறினார்.

GE15க்கான BN வேட்பாளர்களின் பட்டியலில் குறிப்பிட்ட அம்னோ தலைவர்களும் BN அங்கம் வகிக்கும்  உறுப்புகட்சிகளும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட பதவியில் இருப்பவர் மற்றொரு கட்சியின் சீட்டில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனது பேரா நாடாளுமன்றத் தொகுதியைப் பாதுகாக்கவிருக்கும் இஸ்மாயில் சப்ரி, நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், எந்த ஆத்திரமூட்டலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அழைப்பு விடுத்தார்.

GE15 இல், இஸ்மாயில் சப்ரி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அபாஸ் அவாங்(Abas Awang) மற்றும் பெரிகத்தான் நேசனலின் அஸ்மாவி ஹாருன்(Asmawi Harun) ஆகியோருடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், இஸ்மாயில் சப்ரி 2,311 வாக்குகள் பெரும்பான்மையுடன் PKR இன் ஜகாரியா அப்துல் ஹமீது(Zakaria Abdul Hamid) மற்றும் PAS இன் முஸானிஃப் அப் ரஹ்மான்(Musaniff Ab Rahman) ஆகியோரை தோற்கடித்து அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

நவம்பர் 19-ம் தேதி வாக்குப்பதிவும், நவம்பர் 15-ம் தேதி முன்கூட்டியே வாக்குப்பதிவும் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.