தற்போதைய செகாமட் எம்பி எட்மண்ட் சந்தர குமார் தனது இருக்கையைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை.
பார்ட்டி பங்சா மலேசியா (PBM) நேற்று அவரை நிறுத்துவதாக அறிவித்தது – ஆனால் இன்று அவரது பெயர் தேர்தல் ஆணையத்தின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
பக்காத்தான் ஹராப்பான் தொகுதிக்கான வேட்பாளர் ஆர் யுனேஸ்வரன் மலேசியாகினியிடம் சந்தரா வேட்பு மனு மையத்தில் இல்லை என்று கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது சந்தரா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
2018 ஆம் ஆண்டில் அப்போதைய மஇகா தலைவர் எஸ்.சுப்பிரமணியத்திடமிருந்து பி.கே.ஆர் வேட்பாளராகச் சந்தரா செகாமட்டைக் கைப்பற்றினார்.
ஷெரட்டன் இயக்கத்தின்போது கட்சியை விட்டு வெளியேறியவர்களில் அவரும் ஒருவர், பின்னர் பெர்சத்துவில் இணை உறுப்பினராகச் சேர்ந்தார்.
அவர் அக்டோபரில் PBM கட்சியில் சேர்ந்தார் – இது பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகியவர்களைக் கொண்ட ஒரு கட்சியாகும்
செகாமட்டைப் பாதுகாக்க சந்தரா பலமுறை தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் உள்ளூர் பெர்சத்து பிரிவினரும் கூட நேற்று சந்தாராவை இருக்கையில் அமர வைக்கப் பெரிகத்தான் நேசனலுக்கு வற்புறுத்தினார்கள்.