தற்போதைய அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுரைடா கமாருதீன் தனது நாடாளுமன்றத் தொகுதியில் மற்ற நான்கு பெண்கள் உட்பட எட்டு வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட உள்ளார்.
அவர் இந்த முறை பார்டி பங்சா மலேசியா (PBM) சின்னத்தின் கீழ் போட்டியிடுவார்.
ஜுரைடாவைத் தவிர, Rodziah Ismail (Pakatan Harapan), Ivone Low Yi Wen (BN), Sasha Lyna Abdul Latif (Perikatan Nasional), Dr Nurul Ashikin Mabahwi (Pejuang), Lai Wai Chong (Warisan), மற்றும் மூன்று சுயேட்சை வேட்பாளர்களான M Raveendran, Muhammad Shafiq Izwan Mohd Yunos, மற்றும் Tan Hua Meng ஆகிய எட்டு பேர் போட்டியிடுகின்றனர்.
14வது பொதுத் தேர்தலில் அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் 41,956 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜூரைடா வெற்றி பெற்றார்.
நேற்று, இந்தத் தேர்தலில் PBMதனித்து போட்டியிட்டாலும், தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்வதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக ஜுரைடா கூறினார்.
அவரது கூற்றுப்படி, அம்பாங் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக PBM அன்றைய அரசாங்கத்தையும் ஆதரிக்கும்.
“அம்பாங் மக்கள் என்னை 15 ஆண்டுகளாக அறிந்திருக்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே ஒரு குடும்பத்தைப் போல இருக்கிறோம், எனவே அவர்கள் புதிய சின்னத்தின் கீழ் ஆதரிப்பதில் சிரமப்பட மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் தனிநபரின் ஆளுமை மற்றும் சேவையைப் பார்க்கிறார்கள் (கட்சி அல்ல),” என்று வியாழக்கிழமை இரவு PBM இன் தேர்தல் இயந்திரத்தின் தொடக்க விழாவுக்குப் பிறகு கூறினார்.