பெரிகத்தானும் பாரிசானும் சொத்துக்களை அறிவிக்க பயப்படுகிறார்கள் – அன்வார்

பெரிகத்தான் நேஷனல் மற்றும் பாரிசான் நேசனல் வேட்பாளர்கள் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தங்கள் சொத்துக்களை அறிவிக்க  அழைப்பு விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம்.

இதுவரையுல் அறிவிக்காதது பிஎன் மற்றும் பிஎன் வேட்பாளர்கள் வெளிப்படைத்தன்மைக்கு தயாராக இல்லை என்பதை தெளிவாக காட்டுவதாக பிகேஆர் தலைவர் கூறினார்.

“அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருந்தபோது அவர்கள் குவித்த சொத்துக்களை மக்களிடம் வெளியிடத் துணிய மாட்டார்கள், பயப்படுகிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது,” என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

பிகேஆரின் 72 வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர், துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி முதலில் அறிவித்தார். பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் புதன்கிழமை தங்கள் சொத்துக்களை அறிவித்தனர்.

ஊழலுக்கு எதிரான ஆர்வலர்கள் GE15 வேட்பாளர்கள் தங்கள் பிகேஆர் சகாக்களின் முன்மாதிரியைப் பின்பற்றி அவர்களின் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

மூடாவின் தலைவர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் வியாழன் அன்று தனது சொத்து மதிப்பு 1.9 மில்லியன் ரிங்கிட் என அறிவித்தார்.

இதற்கிடையில், டிஏபியின் பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக், நவம்பர் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக அதன் வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பதை தனது கட்சிக்கு எந்த திட்டமும் இல்லை என்று கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறிய அவர், டிஏபி முந்தைய தேர்தல்களிலும் இதைத்தான் கடைப்பிடித்தது என்றும் கூறினார்.

நேற்று, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அதன் GE15 வேட்பாளர்களுக்கான பிகேரின் கட்டாய சொத்து அறிவிப்பை “முட்டாள் தனமானது” என்று சாடினார்.

“சொத்து அறிவிப்பு சில நேரங்களில் முட்டாள்தனத்தின் ஒரு வடிவமாகும். அவர்கள் காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் அமர் நிக் அப்துல்லா நேற்று, “கோடீஸ்வரர்களான சில வேட்பாளர்களைப் போல” செல்வந்தர்கள் அல்ல என்பதால், கட்சியின் தலைவர்கள் சொத்துப் பிரகடனங்களைச் செய்ய “சங்கடமடைந்துள்ளனர்” என்றார்.

-FMT