மூன்று நாட்களுக்கு முன்பு பெண்டாங்கில் சாலையோரத்தில் ஏற்றப்பட்டிருந்த அரசியல் கட்சியின் 50 கொடிகளைசேதப்படுத்தியதன் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு அலோர் செட்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று RM4,500 அபராதம் விதித்தது. அதை செலுத்த தவறினால் 12 மாத சிறைத் தண்டனையை விதித்தார்.
நவம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணிவரை பெண்டாங்கில் உள்ள ஜாலான் புக்கிட் ராயாவின் ஜாலான் கம்போங் அலோர் பரிட் சாலையோரத்தில் குற்றத்தைச் செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கும் தண்டனைச் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிட்டி சபிரா ரம்லி, குற்றம் சாட்டப்பட்டவர் மனைவியை இழந்த அவர் மாதம் RM1,200 சம்பாதிக்கிறார் மற்றும் 17 வயது மகள் மற்றும் 77 வயதான அவரது தாயை ஆதரிக்கிறார், அதனால், தண்டனையை குறைக்குமாறு வேண்டினார்.

























