ஊழல் அமைச்சர்கள் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் – அன்வார் 

ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் எனப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்குத் தாம் அண்மையில் கடும் எச்சரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“நல்லாட்சி பற்றி முதலில் பேசியது நான்தான். நான் பிரதமராக உள்ள காலத்தில் ஊழல் வழக்குகள் இருந்தால், அவர்கள் (அமைச்சர்கள்) உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அனைத்து கட்சி தலைவர்களிடமும் கூறினேன்”.

புத்ராஜெயாவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஶ்ரீ பெர்டானா வளாகத்தில் இன்று மாலை நடந்த சமய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நான் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன். இது ஒரு அரசியல் அறிக்கை அல்ல, இது எனது நம்பிக்கை”.

“நான் சிறையில் தள்ளப்பட்டேன், பாதி அடித்துக் கொல்லப்பட்டேன், நீண்ட காலமாகச் சித்திரவதை செய்யப்பட்டேன்… தற்பெருமை பேசவோ, வெற்றி பெறவோ, பிரதம மந்திரியாக ஆகக் கூடாது.”