அன்வாருடன் ‘வரலாற்று’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் கட்சி தலைவர்கள்

பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று முறைப்படி ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கையெழுத்திடும் விழாவில் அன்வார், பிஎன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, சபா முதல்வர் ஹாஜிஜி நூர், சரவாக் பிரதமர் அபாங் ஜொஹாரி ஓபன் மற்றும் வாரிசான் தலைவர் முகமட் ஷஃபி அப்டல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் அரசியலில் இது ஒரு வரலாற்று தருணம் என்று விவரித்த அன்வார், நல்லாட்சி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதில் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் தெளிவான திசையை கொண்டுள்ளது என்றார்.

“இது பதவிகள் அல்லது அதிகாரங்கள் பர்றியது அல்ல, ஆனால் நல்லாட்சி மற்றும் பொருளாதாரத்தை புதிய மற்றும் உறுதியான முறையில் இயக்குதளுக்கான அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

“நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு திறமையான குழுவுடன் சேர்ந்து, நாளுமன்றத்திற்கு உள்ளே மட்டும் அல்லாமல்  எந்தவொரு பிரச்சினையையும் ஒரே குரலில் (அதாவது) மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்துடன் எதிர்கொள்ள இது எங்களுக்கு உதவும், ”என்று அன்வார் இன்று கையெழுத்திடும் விழாவிற்குப் பிறகு ஒரு குறுகிய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.