சிறுதொழில் நிறுவனங்கள் ரிம 1.500 குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதற்கான புதிய தேதி ஜூலை 1

ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட முதலாளிகள் புதிய குறைந்தபட்ச ஊதியமான ரிம1,500 ஐ அடுத்த ஆண்டு ஜூலை 1 செலுத்தத் தொடங்கலாம் என்று மனிதவள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மே 1 முதல் ஜனவரி 1 வரையிலான தொடக்க நீட்டிப்புக்குப் பிறகு, ஏப்ரலில் வெளியிடப்பட்ட புதிய குறைந்தபட்ச ஊதியத்தில் வழங்கப்பட்ட இரண்டாவது நீட்டிப்பு இதுவாகும்.

சிவக்குமார் (மேலே) ஒரு அறிக்கையில், அடுத்த ஆண்டு பல்வேறு பொருளாதார மற்றும் நிதி சவால்கள்குறித்த பங்குதாரர்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

“மேலும் ஆறு மாதங்களுக்குக் கூடுதல் நீட்டிப்பு என்பது, ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்குத் தங்கள் நிதிகளைச் சமநிலைப்படுத்தவும், அவர்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், மே 1 முதல் புதிய குறைந்தபட்ச ஊதியத்தை ஏற்கனவே செலுத்தும் அனைத்து முதலாளிகளும் அடுத்த ஆண்டு அதைத் தொடர வேண்டும் என்று சிவகுமார் வலியுறுத்தினார்.

“எனவே, இந்த நீட்டிக்கப்பட்ட காலதாமதத்தில் ஈடுபடாத முதலாளிகள் (அமுலாக்கத்தில்) குறைந்தபட்ச ஊதியமான RM1,500 ஐ தொடர்ந்து செலுத்த வேண்டும்.

“இந்த நீட்டிக்கப்பட்ட தாமதம் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படும் என்பது அமைச்சகத்தின் நம்பிக்கை,” என்று அவர் கூறினார்.

உள்ளூர் மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும் புதிய குறைந்தபட்ச ஊதியம் முந்தைய ரிம1,200ஐ விட அதிகமாகும்.