சீனாவின் மறு திறப்பு மற்றும் கோவிட் -19  திடிர் அதிகரிப்புக்கு சுகாதார அமைச்சகம் தயாராகிறது

சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா, “பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதிகள்” அறிவிப்பை மேலும் ஆறு மாதங்களுக்கு (அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை) நீட்டித்துள்ளார்.

தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988 இன் நடைமுறைக்கு அனுமதிக்கும் பிரகடனம், இன்று காலாவதியாகவிருந்தது.

இதற்கான அரசிதழ் டிசம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது.

2021 முதல் இந்த அறிவிப்பு நீட்டிக்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும், மேலும் இது கோவிட்-19 நெறிமுறைகளைச் சீனா திடீரென நிறுத்தியது குறித்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் வருகிறது.

ஒரு அறிக்கையில், சீனாவின் மேம்பாடுகள் மற்றும் புதியதாக வளர்ந்து வரும் கோவிட் -19 வகைகளின் சாத்தியக்கூறுகளுக்குத் தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சகம் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஜாலிஹா கூறினார்.

சீனாவிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். காய்ச்சல் அல்லது பிற அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டவர்கள் மேல் பரிசோதனைக்கு அனுப்பப்படுவார்கள்.

14 நாட்களுக்குள் சீனாவுக்குச் சென்ற அல்லது அதே காலகட்டத்தில் சீனாவுக்குச் சென்ற ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த influenza போன்ற நோய் (ILI) மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் (SARI) ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் RTK-Ag கோவிட்-19 சோதனைகள்க்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

நோயாளி கோவிட்-19 நேர்மறையாக இருந்தால், மரபணு வரிசைமுறை நடத்தப்படும்.

டிசம்பர் 17 மற்றும் டிசம்பர் 24 க்கு இடையில், மலேசியாவில் கோவிட் -19 இன் மிகவும் பரவலான மாறுபாடு ஓமிக்ரான் (66.27%) மற்றும் டெல்டா (32.69%) ஆகும் என்று ஜாலிஹா கூறினார்.

சீனாவிலிருந்து வரும் விமானங்களில் உள்ள கழிவு நீர், கோவிட்-19 க்கு மாதிரியாக எடுக்கப்படும் என்றார்.

வாக்-இன் தடுப்பூசி

தடுப்பூசி பூஸ்டர்களை வழங்குவதன் மூலம் நோய் தடுப்பு முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனறு ஜாலிஹா கூறினார்.

ஆபத்தில் உள்ள குழுவில் உள்ளவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 9 முதல் அரசு கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் வாக்-இன் அடிப்படையில் தடுப்பூசியைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

மற்றவர்களுக்கு MySejahtera பயன்பாட்டின் மூலம் அல்லது உள்ளூர் பொது கிளினிக்குகளைத் தொடர்புகொள்வதன் மூலம் நியமனம் பெறலாம்.

கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க அனைத்து பொது மருத்துவமனைகளிலும் வைரஸ் எதிர்ப்பு மருந்து Paxlovid கிடைக்கும் என்று ஜாலிஹா கூறினார்.