ஜனவரி முதல் பெர்னாஸிடம் இருந்து விவசாயிகள் ரிம10 மில்லியன் பெறுகிறார்கள்

ஏழை நெல் விவசாயிகளுக்கு  Padiberas Nasional Bhd’s (Bernas) 10 மில்லியன் ரிங்கிட் இலாபப் பகிர்வு ஜனவரி முதல் படிப்படியாக வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகம்மட் சாபு(Mohamad Sabu) இன்று அறிவித்தார்.

அவரது கூற்றுப்படி, கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள நெல் விவசாயிகளுக்குப் பணம் செலுத்தப்படும்.

“பெர்னாஸிலிருந்து மீதமுள்ள ரிம 50 மில்லியன் ரிங்கிட் அடுத்த ஆண்டு வழங்கப்படும்போது பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களின் பணம் கிடைக்கும்”.

“அமைச்சகம் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் மூன்று மாநிலங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கணக்கு எண்களைச் சீராகச் செலுத்துவதை உறுதி செய்வதற்காக முடிவு செய்து வருகின்றன,” என்று முகமது (மேலே) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல் தவணை பணம் ஜனவரி 16 க்குள் அந்த விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

மொத்தம் 20,598 நெல் விவசாயிகள் இந்தக் கொடுப்பனவால் பயனடைவார்கள், ஏனெனில் அவர்கள் தலா 250 ரிங்கிட் பெறுவார்கள் என்று முகமட் குறிப்பிட்டார்.

இந்த மாத தொடக்கத்தில், பிரதம மந்திரி அன்வார் இப்ராகிம், ஏழை நெல் விவசாயிகளுக்கு ரிம10 மில்லியன் கொடுக்கப் பெர்னாஸுக்கு அறிவுறுத்தியதாக அறிவித்தார்.

அடுத்த ஆண்டு முதல் இந்தத் தொகை 50 மில்லியன் ரிங்கிட் ஆக உயர்த்தப்படும்.