தேமுவான் பழங்குடியினரின் மூதாதையர் தினம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி நாட்களில், தேமுவான் பழங்குடியினத்தைச்(Temuan tribe) சேர்ந்த ஒராங் அஸ்லி, மக்களைப் பாதுகாத்து தற்போதைய தலைமுறைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வழங்கிய “ஆன்மாக்களை” கௌரவிக்க தங்கள் மூதாதையர்களின் கல்லறையில் சடங்குகளையும் பிரார்த்தனைகளையும் செய்தனர்.

ஒராங் அஸ்லி மக்களிடையே ஐக் முயாங்(Aik Muyang) என்று நன்கு அறியப்பட்ட மூதாதையர் தின கொண்டாட்டம் டிசம்பர் முதல் ஜனவரி வரை பழங்குடியினரைப் பொறுத்து வெவ்வேறு தேதிகள் மற்றும் வெவ்வேறு பாரம்பரிய முறைகளுடன் கொண்டாடப்படுகிறது.

தீபகற்ப மலேசியாவில் உள்ள 18 ஒராங் அஸ்லி குழுக்களில் நான்காவது பெரிய பழங்குடி இனமான தெமுவான் பழங்குடியினரின் பெரும்பகுதி சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் பஹாங்கில் வாழ்கின்றனர். மலாய்க்காரர்களைப் போன்ற பல பழக்கவழக்கங்களையும் அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.

சிலாங்கூரில், கம்போங் புலாவ் கெம்பாஸ், கம்போங் புசுட் பாரு மற்றும் கம்போங் உலு குவாங் ஆகிய இடங்களில் மூதாதையர் தின விழாக்களை நடத்தும் வாய்ப்பைத் தவறவிடாத பல தேமுவான் ஒராங் அஸ்லி குடியிருப்புகள் உள்ளன.

ஒவ்வொரு தேமுவான் குடியேற்றமும் அதன் சொந்த கொண்டாட்ட தேதி மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளது, அவை வழக்கமாகப் பழங்குடி வாழும் இடத்திற்கு அருகில் உள்ள கூறுகளுடன் நெருக்கமாகத் தொடர்புடையவை. இது பொதுவாகப் புதைக்கப்பட்ட இடத்தைச் சுத்தம் செய்வது, மூதாதையரின் ஆன்மாவுக்கு விருந்து வைப்பது மற்றும் அடுத்த நாளைக் கொண்டாடுவது ஆகியவற்றுடன் தொடங்குகிறது.

கம்போங் ஒராங் அஸ்லி புலாவ் கெம்பாஸின் டோக் பாட்டின் கூற்றுப்படி, ஒவ்வொரு கிராமமும் மூதாதையர் தினத்தைக் கொண்டாட வெவ்வேறு தேதிகளைக் கொண்டுள்ளன.

“ஒவ்வொரு கிராமத்திலும் வசிப்பவர்கள் கொண்டாட்டத்தின் நாள் வரும்போது ஒருவரையொருவர் சந்திக்க இது உதவும். கொண்டாட்டத்தின்போது மேற்கொள்ளப்படும் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அனுப்பப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அவற்றைப் பராமரிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம், இதனால் அவை எப்போதும் நினைவில் இருக்கும், அடுத்த தலைமுறையினரால் பின்பற்றப்படும், ”என்று அவர் கூறினார்.