நஜிப் மீதான வழக்கு பலி வாங்கும் படலம் என்று ஜாஹிட் கூறுவது பொறுப்பற்றது – மூடா

சமீபத்திய 2022 அம்னோ பொதுக் கூட்டத்தில் நஜிப் அப்துல் ரசாக் ” அரசியல் வழக்குகளுக்கு” பலியாகிவிட்டார் என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியதை மூடா கடிமையாக விமர்சித்தது.

மூடா பொதுச்செயலாளர் அமீர் அப்துல் ஹாடி ஒரு அறிக்கையில், ஜாஹிட் துணைப் பிரதமராக இருப்பதால், ஜாஹிட் அத்தகைய அறிக்கையை வெளியிடுவது பொறுப்பற்றது என்றும் கூறினார்.  ஜாஹிட்டை நாட்டின் இரண்டாவது உயர்மட்டத் தலைவர் எனவே அவர் கவனமாக அறிக்கை விடவேண்டும்.

“SRC இன்டர்நேஷனல் வழக்கில் நஜிப்பின் 12 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் RM210 மில்லியன் அபராதம் என்ற பெடரல் நீதிமன்றத்தின் முடிவு நியாயமற்றது போன்ற தோற்றத்தை அவரது அறிக்கை உருவாக்குகிறது.”

“நாட்டின் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையையும் இது  சிதைத்துவிடும். இது அரசாங்கத்தின் மீது ஒரு மோசமான சித்தரிப்பை  உருவாக்குகிறது.

“அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சி என்ற முறையில், நீதிமன்ற வழக்குகளில் அரசியல் செல்வாக்கு இருக்காது என்பதை உறுதிப்படுத்த முயற்சிப்போம், மேலும் ஏதேனும் தெளிவான தலையீடு இருந்தால் (நீதிச் செயல்பாட்டில்) நாங்கள் அதை கண்டனம் செய்வோம், அதோடு பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருவோம்,” என்றார்.

மூடா பொதுச்செயலாளர் அமீர் அப்துல் ஹாடி

வெள்ளிக்கிழமை சட்டசபையில் ஜாஹிட் தனது கொள்கை உரையில் நஜிப்பின் குற்றவியல் விசாரணைகளில் நீதித்துறை “நியாயமான நீதியை” வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

முன்னாள் பிரதமர் நஜிப் தற்போது சிலாங்கூரில் உள்ள காஜாங் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் ஊழல் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பெடரல் நீதிமன்றம் அவரது குற்றவாளி தீர்ப்பை உறுதி செய்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

லந்த் முன்னாள் பெக்கான் எம்.பி.க்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி