லோகே: நான் சூப்பர்மேன் இல்லை; பொது போக்குவரத்தை மேம்படுத்தக் கால அவகாசம் தேவை

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த அரசுக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோகே மக்களை வலியுறுத்தினார்.

DAP கட்சி அமைப்பான ராக்கெட்டின் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர், சீன வானொலி நிலையமான AiFM-க்கு சமீபத்திய பேட்டியில், ஒரு அமைச்சரை மாற்றுவதன் மூலம் அடுத்த நாள் முன்னேற்றங்கள் வராது என்று கூறினார்.

போக்குவரத்துத் துறை அமைச்சரை மாற்றியபிறகு, அடுத்த நாளே அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று சொல்ல முடியாது. நான் சூப்பர்மேன் இல்லை… பொது போக்குவரத்தில் ஒரே ஒரு திடீர் சோதனைமூலம் எல்லாம் சரியாகிவிடாது.

“நான் மக்களுக்கு ஒரு செய்தியைக் கொடுக்க விரும்புகிறேன்: இந்த அமைச்சர் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்பார், உங்கள் கவலைகளையும் வலிகளையும் புரிந்துகொள்வார்.”

“எனவே, சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பதில் நான் கவனம் செலுத்துவேன், அதை உடனடியாகத் தீர்க்க முடியும் என்று அல்ல, ஆனால் தீர்வைக் கண்டுபிடிக்கக் கடினமாக முயற்சிப்பேன்.

“இதுதான் நான்  கொடுத்த அழுத்தம்; அதைச் செயல்படுத்த முடியுமா அல்லது மேம்படுத்த முடியுமா, அதற்கு நிச்சயமாக ஒரு கால அவகாசம் தேவை…”

பொதுப் போக்குவரத்துத் துறையில் அதன் செயல்திறனை அளவிடுவதற்கு முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் செயல்படுத்தப்படும் என்று லோக் (மேலே) கூறினார்.

“எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்துத் துறையின் செயல்திறனை அளவிடச் சில அமைப்புகள் இருக்கும்; எடுத்துக்காட்டாக, ஒரு ரயில் ஒரு முறை பழுதடையும் முன்பு எவ்வளவு தூரம் ஓட முடியும். ஒரு முறை பழுதடைவதற்குள் மைலேஜ் அதிகமாக இருந்தால், தரநிலை சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம்”.

“சிங்கப்பூரில், ரயில் 2 மில்லியன் கிமீக்குப் பிறகு பழுதாகிறது. இந்தத் தரநிலை தற்போது நமக்கு வெகுதொலைவில் இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தில் இந்த வகை அளவீட்டைப் பயன்படுத்துவோம்.”

பொதுப் போக்குவரத்தை இயக்குபவர்கள் இப்போது பராமரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

“இது தொழில்நுட்ப வல்லுநர்களின் பொறுப்பு மட்டுமல்ல, முழு நிர்வாகமும் மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும்”.

“அனைத்து துறைகளும் அமைப்புகளும் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்… பின்னர் நாம் சில முன்னேற்றங்களைக் காண்போம்.”