டிஏபி தலைவர்கள் இருவரும் சமாதானம் ஆக மாட்டார்கள்போல் தெரிகிறது

“ராமசாமியைத் தண்டிப்பதாக இருந்தால், கர்பாலுக்கும் அதே தண்டனையைக் கொடுக்க வேண்டும். இருவருக்குமிடையில் பகை முற்றிப்போயுள்ளது.”

 

ராமசாமி பதவி விலக வேண்டும் என்று கர்பால் கோரிக்கை

சூசாகேஸ்: பக்காத்தான் ரக்யாட் ஐயாக்களே,  ஊழல்மிகுந்த மலேசிய அரசியலில் நேர்மையை நிலைநாட்டுவதற்கு பெரும் தியாகங்கள் செய்த பெருமக்கள் உங்களில் பலர் இருக்கலாம். ஆனால்,  சிறந்ததொரு மலேசியாவை உருவாக்க முயல்வது நீங்கள் மட்டுமல்ல என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதியும் பேசியும், பெர்சே பேரணியில் கண்ணீர்புகைக் குண்டுகளில் சிக்கி அவதிப்பட்டும், மெழுகுத்திரி ஏந்திய போராட்டங்களுக்காக நேரத்தைச் செலவிட்டும் வந்துள்ள எங்களுக்கும் அம்னோவுக்கு எதிரான போராட்டத்தில் பங்குண்டு.

அம்னோவின் ஆதிக்கத்திலிருந்து எங்களை விடுவிப்பீர்கள்  என்று உங்கள் பின்னால் அணிவகுத்து நின்றோம்.

ஆனால், நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்?அதுவும் பொதுத் தேர்தல் அருகில் இருக்கும்போது இப்படியா? இந்த விவகாரம் தீர்ந்து விட்டதாக சில நாள்களுக்குமுன் டிஏபி அறிவித்ததே, அது என்னவாயிற்று?

கவனிப்பாளன்: “டிஏபி மத்திய செயல்குழு(சிஇசி) கட்சி தொடர்பில் பொது அறிக்கைகள் விடுக்கக்கூடாது என்று பணித்துள்ளபோதும் அதை மதிக்காமல் நடந்துகொண்டிருக்கும் ராமசாமி தாமாகவே பதவி விலக வேண்டும்”, என்று டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறியுள்ளார்.

ராமசாமிமீது அவர் கூறும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கலாம். அதே வேளை, இப்படி ஒரு அறிக்கை விடுத்து விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்தியுள்ள கர்ப்பாலும் குற்றவாளிதான்.

ராமசாமியைத் தண்டிப்பதாக இருந்தால், கர்பாலுக்கும் அதே தண்டனையைக் கொடுக்க வேண்டும். இருவருக்குமிடையில் பகை முற்றிப்போயுள்ளது. இருவரும் சமாதானம் ஆக மாட்டார்கள்போல் தெரிகிறது.

சிஇசி-தான் இதற்கு ஒரு தீர்வுகாண வேண்டும்.கட்சி இரண்டுபட்டால் கூத்தாடி பிஎன்னுக்குக் கொண்டாட்டமாக போய்விடும்.

1மலேசியாசீனன்: கர்பால் ஒரு மூத்த அரசியல்மேதைபோலவா நடந்துகொள்கிறார். அடாவடித்தனம் அல்லவா செய்கிறார். இப்படிப் பேசுவது அவரது மேதைமைக்கு அழகல்ல.

2008 தேர்தல் வெற்றி டிஏபி தலைவர்களுக்கு இறுமாப்பையும் ஆணவத்தையும் கொடுத்துள்ளது. அடக்கம் வேண்டும்.

கொம்பஸ்: கர்பால்தான் ‘வார்லார்ட்’ என்று கூறி சண்டையைத் தொடக்கி வைத்தார். பதிலுக்கு ராமசாமி ‘’கோட்பாதர்’ என்றார்.

கர்பால் டிஏபி-இன் தேசியத் தலைவர். ஒரு தலைவர்போல நடந்துகொள்ள வேண்டும். சமாதானத்துத் தயார் என ராமசாமி பலமுறை கோடிகாட்டி விட்டார். கர்பால் தம் வலிமையை, ஆற்றமை அம்னோ-பிஎன்னுக்கு எதிராகக் காண்பித்தால் நன்றாக இருக்கும். உங்கள் சண்டையில் மைய நீரோட்ட ஊடகங்கள் குளிர் காய்வதை மறந்து விடாதீர்கள்.

உங்களைப் போன்றோர் இருக்கையில் பக்காத்தானை கவிழ்க்க அம்னோ-பிஎன் தேவையில்லை.

லாங்: ராமசாமி அரசியலுக்குப் புதியவர். அவர் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். மஇகா-வினரோ மற்றவர்களோ தம்மைப் பயன்படுத்திக்கொள்ள அவர் இடமளித்துவிடக்கூடாது.

கர்பாலோ கட்டுப்பாடின்றிப் பேசி வருகிறார். இருவரும் அமைதி காக்க வேண்டும்.

TAGS: