நூருல் இஸ்ஸா இனி பிரதமரின் மூத்த ஆலோசகர் அல்ல, புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்

PKR துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார்(Nurul Izzah Anwar), தனது தந்தை பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மூத்த பொருளாதார மற்றும் நிதி ஆலோசகராக இனி பணியாற்றப் போவதில்லை என்று இன்று அறிவித்தார்.

நூருல் இசா ஒரு அறிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் ஆலோசனைக் குழுவின் செயலகத்தில் சேருவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்ததாகக் கூறினார்.

“குழுவின் தலைவர் முகமட் ஹசன் மரிக்கான்(Mohd Hassan Marican) என்னைத் தலைமைச் செயலகத்தில் சேரவும், நாட்டின் மற்றும் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு உதவவும் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பொறுப்பைத் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன்”.

“இந்தப் புதிய பொறுப்புடன், நான் இனி பிரதமரின் மூத்த பொருளாதாரம் மற்றும் நிதி ஆலோசகராகப் பணியாற்றமாட்டேன்,” என்று நூருல் இஸ்ஸா கூறினார்.

“மலேசியாவின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாட்டிற்கு சேவை செய்ய வழங்கப்பட்ட ஒவ்வொரு வாய்ப்பையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்”.

பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெட்ரோனாஸ் மூத்த மேலாளர் கைரில் அனுவர் ராம்லியுடன்(Khairil Anuar Ramli) இணைந்து நூருல் இஸ்ஸாவுக்கு அழைப்பு விடுத்ததாக ஹசன் இன்று தெரிவித்தார்.