15 வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 11 (2) க்கு இணங்க, சபைத் தலைவர் என்ற முறையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த முடிவை எடுத்ததாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஹாரி அப்துல் கூறினார்.
“இது பல மசோதாக்கள் மற்றும் அரசாங்க விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற அனுமதிப்பதாகும். இதன் பின்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்படும்,” என்று ஜோஹாரி இன்று அமைச்சரின் கேள்வி நேரத்திற்கு முன் அறிவித்தார்.
நிலையியற் கட்டளை 11 (2) இன் பிரகாரம், ஒவ்வொரு அமர்வும் ஆரம்பிப்பதற்கு குறைந்தது 28 நாட்களுக்கு முன்னர், சபை அமர்வில் எந்தத் திகதியில் கூட வேண்டும் என்பதை சபையின் தலைவர் அல்லது பிரதித் தலைவர் தீர்மானிக்க வேண்டும்.
இருப்பினும், சபையின் தலைவர் அல்லது துணைத் தலைவர் அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட தேதிகளை மாற்றலாம்.
தற்போதைய நாடாளுமன்ற அமர்வு மார்ச் 30 ஆம் தேதி முடிவடைய இருந்தது.