முகமட் சலீம் ஃபதே டின்(Mohamad Salim Fateh Din) புதிய மலேசிய தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக (Malaysian Communications and Multimedia) தலைவராக மார்ச் 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனத்தை தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில்(Fahmi Fadzil) இன்று ஒரு முகநூல் பதிவில் அறிவித்தார்
“இணையத்தை இன்னும் அணுகாத மூன்று சதவீத மக்கள் உட்பட அனைத்து தகவல்தொடர்பு உள்கட்டமைப்பு சிக்கல்களையும் சமாளிக்கவும், டிஜிட்டல் இடைவெளியை நிவர்த்தி செய்யவும், மலேசியாவை ஒரு பொன்னான டிஜிட்டல் தசாப்தத்தை நோக்கி நகர்த்தவும் அவரது நியமனம் எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்,” என்று அமைச்சர் கூறினார்.
முகமட் சலீம் ஜூன் 2022 முதல் ஜனவரி 2023 வரை MCMC வாரிய உறுப்பினர் மற்றும் இடைக்கால தலைவராகப் பணியாற்றினார்.