கல்லறையில் உறங்கும் கார்ல் மார்க்ஸ்சை சிரிக்கவைத்த வான் சைபுல்

“இப்போது, கார்ல் மார்க்சின் எலும்புகள் தூசியாக மாறியிருக்கலாம். ஆனால் அவரின் பற்கள் அழியாமல் இருக்கும். அதனால் எனவே எனது கற்பனையில் மார்க்ஸ்சால் சிரிக்க முடியும்.”

“எனவே பெர்சத்து கட்சியின் வான் சைபுல் சொல்வதை கேட்டால், கல்லறையில் உறங்கும் ஜெர்மன் தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் விழுந்து விழுந்து சிரிப்பார்”, என்று கிண்டலடிக்கிறார் மலேசிய சோசியலிஸ் கட்சியின்  துணைத்தலைவர் எஸ் அருட்செல்வன்.

அவரின் கருத்துப்படி, அந்த  “கம்யூனிசத்தின் தந்தையை” அப்படி சிரிக்க வைத்த பெருமை பெர்சாத்துவின் தாசேக் குழுகோர் நடாளுமன்ற உறுப்பினர்  வான் சைபுல் வான் அவர்களுக்கு  செல்கிறது என்றார்.

“1848 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் தத்துவத்தை 175 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 இல் மலேசிய நாடாளுமன்றத்தில் மலேசிய எழுப்பியதைக் குறித்து லண்டனில் ஹைகேட் கல்லறையில் உள்ள  மார்க்ஸ் சிரித்துக் கொண்டிருப்பார்.”

இரண்டு நாட்களுக்கு முன்பு,  வான் சைபுல் (மேலே) அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸின் ‘கம்யூனிஸ்ட் அறிக்கையால்’ ஈர்க்கப்பட்டதா என்றும், பிரதமரை வம்புக்கு இழுத்தார். “ அன்வார் வர்க்க போராட்டத்தை தூண்டுகிறார் என்றார்.

கடந்த பிரதமர்கள் அனைவரும் ‘கம்யூனிஸ்டுகள்’

அருட்செல்வன் கூறுகையில், ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்பது தனியார் சொத்துடமையை அழித்து பொது உடமையை உருவாக்குவதாகும். அன்வாரின் பட்ஜெட்டில் “மிகவும் தீவிரமான விஷயம்” எதுவென்றால் கடுமையான வறுமையை ஒழிப்பதாகும் என்பதாகும்.”

“எனவே அன்வார் பெரும் பணக்காரர்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு வரி விதிப்பது வர்க்கப் போர் என்றால், வேறு சில வர்க்க அடிப்படையில் BR1M – போன்றவை  சோசலிசமாக இருக்க வேண்டும், ஏனெனில் அது ஏழைகளுக்கு உதவி செய்கிறது மற்றும் பணக்காரர்களுக்கு அல்ல, ஏனெனில் ஏழைகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதேபோல்,

“குறைந்த விலை வீடுகள்” மற்றும், புதிய பொருளாதாரக் கொள்கை நோக்கம் வறுமையை ஒழிப்பதும், பூமிபுத்தாவின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுவதும் ஆகும்”

அருட்செல்வன் கூறுகையில், “வான் சைபுல் லாஜிக்” பயன்படுத்தப்பட்டால், பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் உட்பட அனைத்து முன்னாள் பிரதமர்களும் ஏழைகளுக்கு உதவும் கொள்கைகளுக்காக “கம்யூனிஸ்டுகளாக” இருப்பார்கள் என்று அர்த்தமாகும்.

“இப்போது நாம் பொதுவாக பட்டியலிடத் தொடங்கினால், சமூகத்தில் நல்லவை அனைத்தும் ‘சோசலிசம்’ என்று தோன்றுகிறது. எல்லாம் சமமாக இருக்கும்போது, அது ‘கம்யூனிசம்’ – வர்க்கமற்ற சமூகமாக இருக்க வேண்டும்.