ராமசாமி, எம்எஸ்எம்-இடம் பேசக்கூடாது என்ற முதலாவது விதியை மறந்து விட்டார்

“அரசுதொடர்புடைய எம்எஸ்எம், மாற்றரசுக் கட்சியைத் தாக்கும் வாய்ப்பு எப்போ எப்போ என்று காத்திருக்கின்றது. இது தெரிந்தும் டிஏபி தலைவர்கள் எம்எஸ்எம் வழியாகத்தான் தங்கள் மனக்குறைகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறார்கள்.”

திரித்துக் கூறிவிட்டார்கள் என்கிறார் ராமசாமி, மறுபடியும்”

பெயரிலி_4031: செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டுவது நல்லதல்ல என்பது பினாங்கு 2ஆம் துணை முதலமைச்சர் பி.ராமசாமிக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

பிஎன் ஆதரவு செய்தித்தாள்கள்தான் டிஏபி-இலும், பாஸ்ஸிலும் பிகேஆரிலும் பதற்றத்தை உண்டுபண்ண காத்துக்கிடக்கிறார்களே. அவர்கள் தங்கள் எஜமானர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செய்திகளைத் திரித்துப் போடுவார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

தெரிந்துமா அந்த வலையில் திரும்பத் திரும்ப விழுவது? இவ்விவகாரம் தொடர்பில் செய்தியாளர் கூட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும்.அது, டிஏபி-இன் எதிரிகளுக்குத்தான் சாதகமாக அமையும்.

ஒங்: முதலாவது விதி: மைய நீரோட்ட ஊடகங்களிடம் (எம்எஸ்எம்), மிகமிக அவசியம் என்றாலொழிய பேசக்கூடாது.அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் எழுத்தில் அதைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் சொல்வதைத் திரித்துக் கூறினால் வழக்குத் தொடுக்க வாய்ப்பாக இருக்கும்.

இரண்டாம் விதி:எம்எஸ்எம்-மோ அல்லது வேறு ஊடகங்களோ நீங்கள் சொன்னதைத் திரித்துக் கூறி விட்டார்களா, உடனே அதைக் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். டிஏபி தலைவர் கர்பால் கொதித்துப்போகும் வரை காத்திருக்க வேண்டாம்.

புரோண்டோ: அரசுதொடர்புடய எம்எஸ்எம்தான் மாற்றரசுக்கட்சிகளைத் தாக்கும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றதே:இது, மூத்த டிஏபி தலைவர்களுக்குத் தெரியாமல் போனதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

இந்த விசயத்தில், அம்னோ கட்சியினர் கெட்டிக்காரர்கள். உள்ளுக்குள் பிரச்னைகள் இருந்தாலும் வெளியில் கொண்டுவர மாட்டார்கள்.மூன்றாம் தரப்பு அவற்றை அம்பலப்படுத்தினால்தான் உண்டு.

இதை பாஸ் மற்றும் பிகேஆரும் கவனத்தில் வைப்பது நல்லது. 

யாப்: ஏன் இப்படி எல்லாரும் எம்எஸ்எம் விரிக்கும் வலையில் விழுகிறார்கள் என்று தெரியவில்லையே.

பக்காத்தானில் குழப்பம் உண்டுபண்ணத்தானே அவர்கள் காத்திருக்கிறார்கள்.

க்யூ: ராமசாமி, உங்கள் மனக்குறைகளை வெளியில்  சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியான நீங்கள், உள்கட்சித் தகராற்றைவிட, மக்களுக்குச் சேவையாற்றும் பொறுப்புக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நியாயவாதி: செய்தியாளர்கள் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. அதுவும் த ஸ்டாரிடம் பேசியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மை அல்ல என்று நினைக்கிறேன்.

ஊடகங்களிடம் பேசாமல் வாயைப் பொத்திக்கொண்டு இருக்க முடியாதா? உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு ‘மண்டூர்’ ஆகப்  பார்க்கிறீர்கள். இன்றுவரை கட்சியைக் கட்டிக்காத்து வந்திருப்போருக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறீர்கள்.

கட்சிக்காக நீங்கள் இதுவரை எதுவும் செய்ததில்லை.கர்பால் போல் கட்சிக்கு விசுவாசம் செலுத்தியவரும் இல்லை. அவர்களை மதிக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள்.

கலா: கர்பால், ராமசாமி இருவருமே டிஏபிக்குத் தேவை.இருவரும் தனித்தனி ஆளுமை உள்ளவர்கள் என்பதால் முட்டல்மோதல் இருக்கலாம், ஆனாலும் கொள்கை அளவில் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றலாமே.

கர்பால் கட்சியின் மூத்த தலைவர். ராமசாமி கல்வியாளர், ஏழைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடுபவர். இருவரின் திறனும் டிஏபி-க்குத் தேவை.

பிதற்றல்: கர்பால், தம்மிடம் ராமசாமி கை குலுக்க வந்தபோது அதைப் புறக்கணித்து கைகுலுக்க மறுத்தார். பின்னர் ராமசாமியிடம் எந்த விளக்கமும் பெற முயலாமல் பொதுவில்-குறிப்பாக மைய நீரோட்ட ஊடகங்களில் அவருக்கு எதிராக பேசினார். இது, ஒரு தலைவருக்கு அழகா.  

ராமசாமி, பேராசிரியராக இருக்கலாம். அதற்காக எல்லாம் தெரிந்தவர் ஆகிவிட மாட்டார். பெருமை, அகங்காரம் எல்லாம் டிஏபிக்கு நல்லதல்ல. அது அழிவைத்தான் கொண்டுவரும். அவரும் மற்ற டிஏபி தலைவர்களும் மைய நீரோட்ட ஊடகங்களைத் தவிர்ப்பது நல்லது.

கேஎஸ்என்: காட்பாதர் கர்பால் உண்மையை ஆராயாமல் அவசரப்பட்டுப் பேசுவது ஏன்? தாம் சொன்னதைச் செய்தித்தாள்  திரித்துக்கூறி விட்டதாக ராமா கூறினார். அச்செய்தித்தாளும் திருத்தம் போட்டது. அதேதான் இப்போதும் நடந்துள்ளது.

அப்படியிருக்க, கர்பால் ஏன் ராமசாமி பதவி விலக வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கையை முன்வைக்கிறார்?

அவர், ராமசாமியை ஒழித்துக்கட்ட பார்க்கிறார் போல் தெரிகிறது. ஏன் என்று அவருக்குத்தான் தெரியும்.

TAGS: