அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், அரசியல் துன்புறுத்தல் என்று குற்றம் சாட்டுவதற்கு முன், உண்மைகளை சரிபார்க்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஜன விபாவா வழக்கில், அது நிதி அமைச்சகத்தால் பெறப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது, என்று அவர் தமான் தாசிக் திதிவாங்சாவில் நடந்த ஒரு நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
சமீபத்தில் பெர்சத்து தலைவர்கள் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்படுவது அரசாங்கத்தின் அரசியல் துன்புறுத்தலுக்கு சான்றாகும் என்ற கூற்றுகளுக்கு அவர் பதிலளித்தார்.
பெரிகாத்தான் நேஷனல் தலைவரும், முன்னாள் பிரதமருமான முகைதின் யாசின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இவ்வாறாக அன்வார் கூறியுள்ளார்.
முன்னாள் PN தலைமையிலான அரசாங்கம் 92.5 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கோவிட்-19 ஊக்கப் பொதிகளை தவறாகப் பயன்படுத்தியதாக எம்ஏசிசி விசாரணை நடத்தி வருகிறது.
ஜன விபவ திட்டத்துடன் இணைக்கப்பட்ட லஞ்சம் கோருவதும் பெறுவதும் இதில் அடங்கும்.
எம்ஏசிசி நடத்திய விசாரணையில் தான் தலையிடவில்லை என்று அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.
எல்லா வழக்குகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று
சொல்ல முடியாது. அப்படியானால், மற்ற ஊழல் வழக்குகளில் தொடர்புடைய யாரையும் எம்ஏசிசியால் கைது செய்ய முடியாது.
பிப்ரவரி 21 அன்று, அதன் விசாரணையைத் தொடர்ந்து, எம்ஏசிசி ஆனது பெர்சாட்டுவின் தாசேக் கெழுகோற் எம்பி வான் சைபுல் வான் ஜான் 6.9 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாகவும், ஜன விபாவா திட்டத்துடன் இணைக்கப்பட்ட 232 மில்லியன் ரிங்கிட் சாலைத் திட்டத்தில் குறிப்பிடப்படாத தொகையைக் கோரியதாகவும் குற்றம் சாட்டியது.
செகம்புட் பெர்சாட்டு துணைத் தலைவர் ஆடம் ராட்லான் ஆடம் முஹம்மது, ஜன விபாவா சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு லஞ்சம் கேட்டது மற்றும் வாங்கியது ஆகிய ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.
எம்ஏசிசி கடந்த வாரம் பெர்சத்து பொருளாளர் ஜெனரல் சலே பஜூரியை கைது செய்து ரிமாண்ட் செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
-fmt