கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவுக்கு அருகில் உள்ள புலாவ் மெராண்டியில்(Pulau Meranti) உள்ள விரைவுத் தூதுப் பணி(courier) மையத்தில் இரண்டு அரசியல்வாதிகளுக்கு அனுப்பப்பட்ட கஞ்சா இலை சாறு நிரப்பப்பட்ட டூத் பேஸ்ட் குழாய் இருப்பதாக நம்பப்படும் ஒரு பார்சலை செபாங் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரசாங்க அலுவலகத்தில் ஒரு அதிகாரி அளித்த அறிக்கையின் தகவலைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகச் செபாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப்(Wan Kamarul Azran Wan Yusof) கூறினார்.
தகவலின் அடிப்படையில், அந்தப் பார்சலில் தடை செய்யப்பட்ட பொருள் இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.கடந்த வாரம், அரசு அலுவலகத்திற்கு கஞ்சா இலைகள் அடங்கிய பார்சலும் வந்தது.
போலீசார் கூரியர் மையத்திற்குச் சென்று கஞ்சா இலை சின்னம் மற்றும் ‘ஹேப்பி கிரீன்’ என்று எழுதப்பட்ட பற்பசை குழாய் கொண்ட பழுப்பு நிற பெட்டியைப் பறிமுதல் செய்ததாக வான் கமருல் கூறினார்.
இந்தோனேசியாவில் உள்ள முகவரியுடன் அனுப்பியவர் ஆன்லைன் தளம்மூலம் இந்தப் பொருளை வாங்கியது சோதனையில் தெரியவந்தது என்று அவர் கூறினார்.
“பறிமுதல் செய்யப்பட்ட பொருளுக்கும் முகவரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது, மேலதிக விசாரணை தொடர்கிறது, “என்று வான் கமருல் மேலும் கூறினார்.