அரசு கிளினிக்குகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு நீண்ட நேரம் வேலை செய்ததற்காக முழுமையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற கூற்றுக்களை சுகாதார அமைச்சகம் மறுஆய்வு செய்யும்.
அதன் அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா(Dr Zaliha Mustafa) இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுச் சேவைத் துறை இந்த விவகாரத்தைக் கையாள்கிறது.
“நாங்கள் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொண்டுள்ளோம், குறிப்பாகத் துறையுடன் நாங்கள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். நாங்கள் இதை விரிவாக ஆராய்ந்து செம்மைப்படுத்துவோம்,”என்று கோட்ப்ளூ தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, சுகாதார அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 52 பொது கிளினிக்குகள், அரசு மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க வார நாட்களில் இரவு 9.30 மணிவரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தது.
தனியார் மருத்துவர்கள் மற்றும் ஒப்பந்த மருத்துவர்களும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய மாதங்களில், தீபகற்ப மலேசியாவில் உள்ள முக்கிய பொது மருத்துவமனைகள் தொற்றா நோய்கள் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு அவ்வப்போது நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.