கெடா சட்டசபையில் கட்சி தாவல் மசோதா நிறைவேறியது

கெடா சட்டமன்றம் இன்று தனது கூட்டத்தில் கட்சி தாவுவதைத் தடுக்கும் மாநில அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர்(Muhammad Sanusi Md Nor) கெடா மாநில அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் 2023 ஐ தாக்கல் செய்தார், பின்னர் மாநில சபாநாயகர் ஜுஹாரி புலத்(Juhari Bulat) இந்த மசோதா மீதான விவாதத்தைச் சட்டமன்றத்தில் தொடங்கினார்.

ஜம்ரி யூசுப் (Pakatan Harapan-Suka Menanti), முக்ரிஸ் மகாதீர் (Pejuang-Jitra), முகமட் அசாம் அப்ட் சமத் (Perikatan Nasional-Sungai Limau), நோர்சாப்ரினா முகமட் நூர் (BN-Bandar Baharu) மற்றும் அமிருடின் ஹம்சா (Pejuang-Anak Bukit) ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர்.

தனது விவாதத்தில், மாநிலத்தில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த விசுவாசம் ஒரு முக்கியமான மற்றும் உயர் மதிப்பு என்றும், எனவே ஹோப்பிங் எதிர்ப்புச் சட்டம் தேவை என்றும் நோர்சாப்ரினா கூறினார்.

ஒரு கட்சி கூட்டணியிலிருந்து ஆதரவை மாற்ற முடிவு செய்தால், அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் சுயலாபத்திற்காக மக்களின் ஆணை தவறாகப் பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்வோம்,” என்று அவர் கூறினார்.

கெடா எதிர்க்கட்சித் தலைவரான ஜாம்ரி, கட்சி விரோத சட்டம் நாட்டின் அரசியல் அமைப்பில் வாக்காளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்று கூறினார்.

வாக்காளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருக்கும் ஊழலை மறைமுகமாகக் கட்டுப்படுத்தியுள்ள இந்தச் சட்டத்திருத்தம் வரலாறு படைத்துள்ளது.