கம்போடியா சிறையில் வாடும் மகனை கொண்டுவர அரசாங்கத்தின் உதவியை நாடும் தந்தை

“ஹேமகவின் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் புனோம் பென்னில் விடுமுறைக்குச் செல்வதாகக் கூறி ஏமாற்றப்பட்டார்.” 2016 ஆம் நடந்த அந்த நிகழ்வில் தனது மகன் ஹேமகவின் ஒரு  ஹோட்டல் அறையில் தங்கி இருந்த போது கைதானார் என்று கூறுகிறார். எம் கார்த்திகேசு.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கம்போடியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது 26 வயது மகனை மீட்டு வருமாறு அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்போது 19 வயதாக இருந்த ஹேமகவினும், அவரது காதலியும், மற்றும் இரண்டு நண்பர்களுடன் விடுமுறைக்காக கம்போடிய தலைநகருக்குச் செல்ல அனுமதிக்குமாறு அவரது தந்தையை வற்புறுத்தியுள்ளனர்.

கார்த்திகேசு, முதலில் அனுமதி வழங்க மறுத்ததாகவும், ஆனால் தனது மகனின் காதலியை நம்பியதால் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

ஹேமகவின் முதலில் கம்போடியாவுக்குப் சென்றார்., மற்ற மூவரும் தங்களுக்கு டிக்கெட்டுகளில் சிக்கல் இருப்பதால் தங்கள் விமானம் தாமதமாகிவிட்டதாகக் கூறினர்.

“அவர்கள் அவரை ஒரு ஹோட்டலில் செக்-இன் செய்யச் சொன்னார்கள், மற்றவர்கள் ஒரு நாள் கழித்து வருவார்கள் என்று சொன்னார்கள். எனது மகன் அறைக்குள் நுழைந்ததும், அவர் கைது செய்யப்பட்டார்” என்று கார்த்திகேசு இன்று சுவராம் மலேசியா (சுராம்) ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“போலீசார் போதைப்பொருள் அடங்கிய பெட்டியை அவரிடம்கொடுத்து  பெட்டியை வைத்திருப்பதைப் படம் பிடித்தனர். பெட்டியில் இருந்த அவரது கைரேகை நீதிமன்றத்தில் சாட்சியமாக பயன்படுத்தப்பட்டது.

மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவரான ஹேமகவினுக்கு 2016 ஆம் ஆண்டு கம்போடிய நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

கார்த்திகேசு, தனது மகனைக் காப்பாற்றுவதற்கான அனைத்து வழிகளையும் தீர்ந்துவிட்டதாகவும், இம்மாத இறுதியில் கம்போடியாவுக்கு மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் இந்த பிரச்சினையை எழுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.

சுவராம் வழக்கறிஞர், ஃபரிதா முகமட், ஹேமகவினின் நீதிமன்ற விசாரணையை பற்றி எழுப்பினார், இது “பல சந்தேகங்களால் மறைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

“விசாரணையின் போது முக்கியமான சாட்சிகள் அழைக்கப்படவில்லை. விசாரணை அதிகாரி, அவரைக் கைது செய்த காவல்துறை அதிகாரி மற்றும் வேதியியலாளர்கள் போன்ற நிபுணத்துவ சாட்சிகளும் இதில் அடங்குவர். ஹோட்டல் அறையை முன்பதிவு செய்த நபரையும் அழைக்கவில்லை, ”என்றார்.

கம்போடிய மொழியில் இருந்த நீதிமன்ற விசாரணையைப் புரிந்துகொள்வதிலும் அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதிலும் ஹேமகவினுக்கு சிரமம் இருப்பதாகவும், மொழிபெயர்ப்பாளருக்கு ஆங்கிலத்தில் போதிய அறிவு இல்லை என்றும் அவர் கூறினார்.

மனித உரிமைகளுக்கான ஆசியான் பாராளுமன்ற உறுப்பினர்களின் (APHR) இணைத் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ, இந்த வழக்கில் மனித கடத்தலின் கூறுகளை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்றார்.

“பல இளைஞர்கள் போதைப்பொருள் கடத்தும் கருவியாக  மாறுவதற்கு ஏமாற்றப்பட்டுள்ளனர். ஹேமாகவினின் கைது ஆள் கடத்தலுக்கு ஆளானதாகத் தெரிகிறது,” என்றார்.

கார்த்திகேசு, தனது மகனுக்காகப் போராட நிதி இல்லாமல் போய்விட்டதாகக் கூறினார், இருப்பினும் தனது மகனை நம்பிக்கையுடன் இருக்குமாறும், “நான் இதை  கைவிட மாட்டேன்” என்று சபதம் செய்ததாகவும் கூறினார்.

“நான் அவரை லாக்கப்பில் (2020 இன் தொடக்கத்தில்) சந்தித்தபோது, “அப்பா, பொறுங்கள், தைரியமாக இருங்கள் ஒரு நாள் நான் திரும்பி வருவேன்.” என்றார்”.

“எனது மகனுக்கு அனுதாபம் காட்டுமாறு மலேசிய மற்றும் கம்போடிய அரசாங்கங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த தீபாவளிக்குள் வருவார் என நம்புகிறேன்,” என்றார்.