பருவமழை மாறும் கட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது – மெட்மலேசியா

கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் முடிவைக் குறிக்கும் வகையில், பருவமழை மாறும் கட்டம் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி மே நடுப்பகுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (MetMalaysia) இயக்குநர் ஜெனரல் முகமட் ஹெல்மி அப்துல்லா(Muhammad Helmi Abdullah) ஒரு அறிக்கையில், இந்தக் கட்டத்தில், இடியுடன் கூடிய பலத்த மழையை உருவாக்கும், வலுவான காற்றையும் கொண்டுவரும்.

“இது வழக்கமாக மேற்கு கடற்கரை மற்றும் தீபகற்பத்தின் உட்புறங்கள், மேற்கு சபா மற்றும் மத்திய சரவாக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலையில் நிகழ்கிறது. இந்த நிலைமைகள் திடீர் வெள்ளம் மற்றும் நிலையற்ற கட்டமைப்புகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன,”என்று அவர் கூறினார்.

மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், மைகுவாக்கா மொபைல் பயன்பாடு மற்றும் சமூக ஊடக தளங்கள்மூலம் வழங்கப்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை எப்போதும் புதுப்பித்துக்கொள்வதோடு, இந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஹெல்மி அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு மெட்மலேசியாவின் ஹாட்லைன் எண்ணான 1-300-22-1638 ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.