பட்ஜெட் 2022-ன் விற்பனை வரி உள்ளிட்ட 2 வரிகளை விதிக்க நிதி அமைச்சகம் தாமதம்

இந்த ஆண்டு அமல்படுத்த திட்டமிடப்பட்ட 2022 பட்ஜெட்டின் கீழ் ஒரு விற்பனை வரி(excise duty) மற்றும் இரண்டு வரிகள் அறிவிக்கப்படும் தேதிக்குப் பின்ன்னர் தாமதமாகும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

தாமதத்தில் 33.3 கிராம் / 100 கிராமுக்கு மேல் சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட முன் கலப்பு பொருட்கள்மீதான எக்சிஸ் வரி, பொருட்களின் விநியோகத்திற்கான சேவை வரி மற்றும் குறைந்த மதிப்புப் பொருட்கள் (low-value goods) மீதான விற்பனை வரி ஆகியவை அடங்கும்.

“இந்த மூன்று முன்முயற்சிகளும் 2023 ஆம் ஆண்டில் தொடங்க பரிந்துரைக்கப்பட்டன, இருப்பினும், தயாரிக்க அதிக நேரம் தேவைப்படும் தொழில்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, குறிப்பாகக் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றைச் செயல்படுத்த ஒரு புதிய தேதியை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தவிர, இந்தத் தாமதம் மூன்று முன்முயற்சிகளின் சட்ட அம்சங்களைச் சீராகச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு நேரம் கொடுக்கும் என்றும் அது கூறியது.

பட்ஜெட் 2022 இல், நீரிழிவு மற்றும் உடல் பருமன் அதிகரிப்பதைத் தடுக்க ப்ரீ-மிக்ஸ்டு தயாரிப்புகளுக்கான எக்சிஸ் வரியை அரசாங்கம் அறிவித்தது.

டெலிவரிகள் மீதான சேவை வரி விநியோக வழங்குநர்களிடையே சமமான நடத்தையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் LVG மீதான வரி உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும்.