ஜாமீல்கிர் பஹாரோமுக்கு(Jamil Khir Baharom) பதிலாகக் கெடாவில் கட்சியை வழிநடத்த முன்னாள் அம்னோ துணைத் தலைவர் மஹ்திர் காலிட்டை(Mahdzir Khalid) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அம்னோ அறிவித்துள்ளது.
கட்சித் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி இன்று அறிவித்த மூன்று புதிய அம்னோ மாநிலத் தலைவர்களில் மஹ்ட்சிரும் ஒருவர்.
அராவ் அம்னோ பிரிவுத் தலைவர் ரோசாபில் அப்துல் ரஹ்மான்(Rozabil Abdul Rahman), கங்கார் பிரிவுத் தலைவருக்கான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அஸ்லான் மானுக்குப் பதிலாகப் பெர்லிஸ் அம்னோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் ஜலாலுடின் அலியாஸ் நெகிரி செம்பிலான் அம்னோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெர்லிஸில், ரோசாபில்(Rozabil) தலைவராகவும், அவரது துணைத் தலைவர் முகமட் ஃபதுல் பாரி மாட் ஜஹாயாவாகவும்(Mohd Fathul Bari Mat Jahaya) நியமிக்கப்பட்டுள்ளனர். கெடாவில், மஹ்ஜிர்(Mahdzir) தலைவராகவும், அவரது துணைத் தலைவர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம்(Abdul Azeez Abdul Rahim) ஆவார்.
” நெகிரி செம்பிலானில், ஜலாலுடின் தலைவராகவும், அவரது துணைத் தலைவர் ஹாஷிம் ருஸ்டி(Hashim Rusdi); மலாக்கா (தலைவர்) அப்ரவூப் யூசோ, மற்றும் அவரது துணை தலைவர் ரைஸ் யாசின்(Rais Yasin),” என்று இன்று கோலாலம்பூரில் உள்ள அம்னோ தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் ஜாஹிட் கூறினார்.
முன்னதாக, அறிவிப்புக்கு முன்னர், சனிக்கிழமை கட்சித் தேர்தலுக்குப் பிறகு அம்னோ உச்ச மன்றத்தின் முதல் கூட்டத்திற்கு ஜாஹிட் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்களும் ஜாஹிட் மற்றும் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் முன்னிலையில் தங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையில், நாட்டின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு அம்னோ தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று ஜாஹிட் வலியுறுத்தினார்.
“மிக முக்கியமான விசயம் என்னவென்றால், தற்போதைய தலைமை தற்போதுள்ள ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கிறது. அம்னோவின் ஆதரவு நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது”.
“பிரதமராக அன்வாரின் தலைமையை அம்னோ முழுமையாக ஆதரிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து கருத்துத் தெரிவித்த பாகன் டத்தோ எம்பி, அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்துள்ளன, ஆனால் முறையான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றார்.
ஒற்றுமை அரசாங்க செயலகம் விவாதிக்கப்பட வேண்டிய விசயங்களை விவரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.