மலேசியாவில் முதலீடு செய்ய சவுதி வணிக நிறுவனகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அன்வார்

தெளிவான கொள்கைகள் கொண்ட நிலையான அரசாங்கத்தின் கீழ் மலேசியா இருப்பதால், நாட்டில் அதிக முதலீடு செய்ய சவூதி அரேபியாவில் உள்ள வர்த்தகர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்.

நூற்றுக்கணக்கான சவூதி மற்றும் மலேசிய தொழிலதிபர்களிடம் பேசிய அவர், தனது தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டில் வணிகங்களை ஆதரிக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் மதானி நிகழ்ச்சி நிரல் உட்பட  வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.

ரமடானுக்குப் பிறகு விரைவில் பிரதிநிதிகளை அனுப்பவும், அந்நாட்டு  சகாக்களை சந்திக்கவும் வணிக சமூகத்தில் உள்ள சிலரிடம் பேச நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன், என்று அவர் கூறினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு என முன்னுரிமைத் துறைகளை அன்வார் பட்டியலிட்டார்.

மலேசியாவில் உங்கள் தீவிர பங்கேற்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம், என்று அவர் கூட்டத்தில் தனது முக்கிய உரையின் போது கூறினார்.

மார்ச் 22 முதல் சவூதி அரேபியாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்ள  இருக்கும் அன்வார், முதலீடு விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நல்ல பரஸ்பர உறவு இருப்பதாக கூறினார்.

உள்கட்டமைப்பில் மலேசியாவில் உள்ள சவுதி அரேபியாவிலிருந்து சில வகையான முதலீடுகளைக் கொண்டுள்ளோம், மேலும் சவூதி அரேபியாவுடன் ஒப்பிடும்போது சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட மலேசியா, இங்கு முதலீடுகளைக் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு உங்கள் அனைவரையும் நான் வலுவாக கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் இது முஸ்லீம் உலகிற்கு நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும், எனவே மேலும் அக்கப்ப்ப்பூர்வமான பொருளாதாரங்களை ஊக்குவிக்கும், என்று அவர் கூறினார்.

 

-fmt