நாட்டில் இதுவரை எந்தவொரு மார்பர்க் வைரஸ்(Marburg virus) நோயும் கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா(Zaliha Mustafa) தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்க சுகாதார அமைச்சு தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் கூறினார்.
வைரஸின் வளர்ச்சியை அவ்வப்போது கண்காணிப்பதால், குறிப்பாக நாட்டின் சர்வதேச நுழைவு வாயில்களில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று சாலிஹா (மேலே) கூறினார்.
“இது போன்ற வைரஸ்குறித்து ஏதேனும் செய்தி வரும்போதெல்லாம், நாங்கள் கண்காணிப்பை மேற்கொள்வோம், குறிப்பாக ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகள்”.
“எவ்வாறாயினும், நாட்டில் இதுவரை வைரஸின் நேர்வுகள் எதுவும் கண்டறியப்படவில்லை,” என்று அவர் இன்று தாமான் உத்தாமாவில் உள்ள செகிஜாங் ரமலான் பஜாரில்(Sekijang Ramadan Bazaar) ஜொகூர் 2023 ரமலான் பஜார் நடைபயணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய மலேசியர்கள் மோசமடைந்து வரும் ஆரோக்கியத்தின் அறிகுறிகளைக் காட்டினால் அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, தான்சானியாவின் வடமேற்கு(Tanzania’s northwestern) பிராந்தியமான ககேராவில்(Kagera) இதுவரை ஐந்து உயிர்களைக் கொன்ற மார்பர்க் வைரஸ் நோய்குறித்து மலாவியின் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.
மார்பர்க் வைரஸ் நோயின் அறிகுறிகளில் இரத்தக்கசிவு, காய்ச்சல் மற்றும் எபோலாவைப் போன்ற பிற அறிகுறிகள் அடங்கும்.
பாதுகாப்பற்ற உடலுறவின்போது மற்றும் திறந்த காயங்கள் போன்ற உடல் திரவங்கள்மூலம் வைரஸ் பரவுகிறது.